WTC பாயிண்ட்ஸ் டேபிள்.. கீழே இறங்கிய இந்திய அணி.. ஆதிக்கம் முடிந்தது.. மாறிய புள்ளி நிலவரங்கள்

0
443
ICT

இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக கைப்பற்றிய பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் பெரிய மாற்றம் நிகழ்ந்திருக்கிறது.

தற்போது நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு இந்தியா வந்து முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளையும் வென்று தொடரையும் கைப்பற்றியது. இந்த நிலையில் மும்பையில் நேற்று முன்தினம் துவங்கிய மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இன்று 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்திய அணியை ஒயிட் வாஸ் செய்தது.

- Advertisement -

முடிவுக்கு வந்த இந்திய அணியின் ஆதிக்கம்

2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இந்திய அணி தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை உள்நாட்டில் தோற்றத்தின் மூலமாக முதல்முறையாக இந்திய அணியின் ஆதிக்கத்திற்குஇந்த முறை முடிவு வந்திருக்கிறது.

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்திற்கு முன்னேற இந்திய அணி இரண்டாம் இடத்திற்கு சரிந்திருக்கிறது. மேலும் இந்திய அணியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வாய்ப்புக்கு கடும் நெருக்கடி கொடுப்போம் இலங்கை, நியூசிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன.

- Advertisement -

ஐந்து அணிகளுக்கு இடையேயான போட்டி

தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சைக்கிளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறக்கூடிய வாய்ப்பில் ஆஸ்திரேலியா இந்தியா, இலங்கை நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா என மொத்தம் ஐந்து அணிகள் மட்டுமே இருக்கின்றன. தற்போது இந்த ஐந்து அணிகளில் இருந்து இரண்டு அணிகள் மட்டுமே இறுதிப்போட்டிற்கு முன்னேறும்.

2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியல் :

ஆஸ்திரேலியா – 62.50
இந்தியா – 58.33
இலங்கை – 55.56
நியூசிலாந்து – 54.55
தென்னாப்பிரிக்கா – 54.17
இங்கிலாந்து – 40.79
பாகிஸ்தான் – 33.33
பங்களாதேஷ் – 27.50
வெஸ்ட் இண்டீஸ் – 18.52

இதையும் படிங்க : 92 வருடம்.. இந்திய அணி மோசமான வரலாறு.. நியூஸி ஒயிட் வாஸ் செய்து சரித்திர வெற்றி.. சொந்த மண்ணில் சோகம்

தற்போது இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை முழுமையாக தோற்று விட்ட காரணத்தினால், அடுத்து ஆஸ்திரேலியா சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் குறைந்தபட்சம் நான்கு டெஸ்ட் போட்டிகளை வென்றால் மட்டுமே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -