இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் ஒரு குறிப்பிட்ட இளம் இந்திய வீரருக்கு மிகப்பெரிய திருப்புமுனை தொடராக அமையும் என ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார்.
தற்போது ஐபிஎல் தொடருக்கு இந்திய வீரர்கள் டி20 உலக சாம்பியன் ஆக நுழைகிறார்கள். எனவே தனிப்பட்ட ஒவ்வொரு இந்திய வீரர்கள் மீதும் அதிக எதிர்பார்ப்புகள் ஐபிஎல் தொடரில் இருக்கிறது.
இந்த 14 வயது வீரர் வைபவ் சூரியவன்சி அண்டர் 19 உலக சாம்பியன் ஆக இந்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கு வருகிறார். மேலும் அந்த உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் பெரிய சதத்தை அடித்து அணியை வெற்றி பெற வைத்தார். மேலும் சிக்சர்கள் அடிப்பதில் ஒவ்வொரு தொடரிலும் பல சாதனைகளை படைத்து வருகிறார்.
இதன் காரணமாக இந்த ஆண்டு அவருக்கு சிறந்த ஐபிஎல் தொடர் அமையும் என பலரும் கூறி வருகிறார்கள். அதே சமயத்தில் எதிரணி பவுலர்கள் அவர் குறித்து நன்றாக தெரிந்து கொண்டு வருவதால் இன்னும் எதிர்பார்ப்புகள் அதிகமாக மாறி உள்ளது.
இது குறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “நீங்கள் அபிஷேக் ஷர்மாவை பொறுத்த வரையில் எடுத்துக் கொண்டால் நீண்ட காலமாக ஐபிஎல் தொடரில் இருந்து வருகிறார். ஆனால் அவருக்கு இன்னும் ஒரு சிறந்த ஐபிஎல் தொடர் அமையவில்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் இந்த முறை அது மாறப்போகிறது. அவருக்கு இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் மிகப்பெரிய திருப்புமுனை தொடராக அமையும்”
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் கிடையாது.. சிஎஸ்கே இந்தப் பிளேயர் அதிகம் நம்பும்.. அவரால் செய்ய முடியும் – பியூஸ் சாவ்லா பேட்டி
“மேலும் இந்திய அணிக்காக விளையாடக்கூடிய எல்லா வீரர்களிடமும் பெரிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருக்கும். அவர்கள் பெரிய ரன்கள் எடுக்க வேண்டும் என நினைப்பார்கள். இதில் அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா போன்ற வீரர்கள் முக்கியமானவர்களாக இருப்பார்கள்” என்று கூறி இருக்கிறார்.