சஞ்சு சாம்சன் கிடையாது.. சிஎஸ்கே இந்தப் பிளேயர் அதிகம் நம்பும்.. அவரால் செய்ய முடியும் – பியூஸ் சாவ்லா பேட்டி

0
5
Chawla

நடக்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி நிர்வாகம் ஒரு குறிப்பிட்ட இந்திய வீரரை அதிகமாக நம்பி இருக்கும் என பியூஸ் சாவ்லா கூறியிருக்கிறார்.

நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் முக்கிய மூன்று போட்டிகளில் பெரிய அரை சதங்கள் அடித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ஆனால் அவரைத் தாண்டி ஒரு வீரரை சிஎஸ்கே அணி நிர்வாகம் அதிகம் நம்பி இருக்கும் என்று அவர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே பேட்டிங் வரிசை

தற்போது சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் முதல் மூன்று இடங்களில் சஞ்சு சாம்சன், ருதுராஜ், ஆயுஸ் மத்ரே கட்டாயம் இடம் பெறுவார்கள் என்று தெரிகிறது. இதற்கு அடுத்து நான்காவது இடத்தை யாருக்கு கொடுக்கப் போகிறார்கள்? என்பது தான் மிக முக்கியமான கேள்வியாக இருந்து வருகிறது.

போட்டியில் பவர் பிளேவுக்கு வெளியே இரண்டாவது விக்கெட் விழும் பொழுது நான்காவது இடத்தில் சிவம் துபே வருவது சரியானதாக இருக்கும். ஆனால் தென் ஆப்பிரிக்க அணிக்காக நான்காவது இடத்தில் டிவால்ட் பிரிவிஸ் மிக அதிரடியாக விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இவர் முக்கியமானவர்

இதுகுறித்து பியூஸ் சாவ்லா பேசும் பொழுது “இப்போது சிவம் துபேவிடம் அந்த குறிப்பிட்ட நம்பிக்கை அதிகமாக இருக்கிறது. அதாவது ஓரிரு ஓவர்கள் பொறுமையாக இருந்தாலும் பிறகு அதற்கான ரன்களை கொண்டு வர முடியும் என அவர் நம்புகிறார். அவரால் அதை தொடர்ந்து செய்யவும் முடிகிறது. ஒரு வீரரை நம்பிக்கை இப்படித்தான் மாற்றுகிறது”

இதையும் படிங்க: சிஎஸ்கே அணிக்கு இப்போது பெரிய பின்னடைவு.. இந்த வேலையை செய்ய அவர்களிடம் யாருமே இல்லை – ஆகாஷ் சோப்ரா

“அவர் இந்தியாவுக்காக இதை தொடர்ந்து செய்து வந்தார் தற்பொழுது ஐபிஎல் தொடரில் செய்ய முடியும் என சிஎஸ்கே நம்புகிறது. இப்போது அவருக்கு பெரிய பங்கு இருக்கிறது. ஏனென்றால் மிடில் ஓவர்கள் என்று வரும் பொழுது சிஎஸ்கே அந்த இடத்தில் ரன்கள் குவிப்பார் என சிஎஸ்கே அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -