கேஎல் ராகுலுக்கு பதிலா பண்ட் இடத்தை.. வேறு ஒருவர் பூர்த்தி செஞ்சுட்டாரு.. சாம்பியன்ஸ் ட்ராபில வாய்ப்பு கம்மி – ஆகாஷ் சோப்ரா

0
242

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஒரு நாள் தொடருக்கு பிறகு இந்திய அணி நேரடியாக அடுத்தது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா இந்திய அணி தேர்வு குறித்து சில முக்கிய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி தொடர்

கடந்த ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக கேஎல் ராகுல் மிகச் சிறப்பாக செயல்பட்டதை தொடர்ந்து அவருக்கு அடுத்தடுத்து இந்திய ஒரு நாள் தொடர்களில் தொடர்ச்சியாக வாய்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளில் வாய்ப்பு பெற்ற கேஎல் ராகுல் முதல் போட்டியில் 2 ரன் இரண்டாவது போட்டியில் 10 ரன் எடுத்து வெளியேறினார். இந்த இரண்டு போட்டிகளிலும் 6வது இடத்தில் களம் இறங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழ்நிலையில் மூன்றாவது போட்டியில் ஐந்தாவது இடத்தில் களம் இறங்கி 29 பந்துகளில் 40 ரன்கள் குவித்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில் கே.எல். ராகுல் மீண்டும் ஓரளவு பேட்டிங் ஃபார்ம்க்கு வந்திருக்கும் நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரிஷப் பன்ட் விளையாடுவது சந்தேகம் தான் என இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ரிஷப் பண்ட் விளையாடுவது சந்தேகம்

இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா விரிவாக கூறும்போது “முதல் இரண்டு போட்டிகளில் கேஎல் ராகுல் ஆறாவது இடத்தில் களம் இறக்கியதால் ரன்கள் எடுக்கவில்லை என்பது எனக்கு புரிகிறது. நீங்கள் அவரை முதல் தேர்வாக தேர்ந்தெடுக்கும் போது அதற்குத் தகுந்தவாறு மாற்றங்களை செய்ய வேண்டும். இரண்டு போட்டிகளுக்குப் பிறகு மாற்றினால் அவர் நம்பிக்கை இழக்கத் தொடங்குவார். சாம்பியன்ஸ் டிராபி தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவது சந்தேகம் தான் என்று எனக்கு தோன்றுகிறது.

இதையும் படிங்க:2 விக்கெட்.. கடைசி ஓவரில் டெல்லி அணி திரில் வெற்றி.. எம்ஐ வீராங்கனை அதிரடி வீண்.. மகளிர் ஐபிஎல் டி20

20ம் தேதி அக்சர் பட்டேல் ஐந்தாவது இடத்தில் விளையாடுவதை பார்ப்பதால் ரிஷப் பண்ட் விளையாடுவது வாய்ப்பு குறைவு என்று தோன்றுகிறது. ஒரு இடத்தை வீரர் மட்டுமே இடம்பெற்றிருக்கும் போது முதல் ஆறு இடங்களில் வலது கை வீரர்கள் அனைவரும் இடம்பெற வேண்டும் என்ற கௌதமின் கூற்றுக்கு நான் சிறிது வேறுபடுகிறேன். ஒரு அணி என்பது தனி நபர்களால் ஆனது. ஒரு நபர் நான் பலவீனமாகவோ அல்லது பாதுகாப்பு இல்லாமல் கருதப்பட்டால் தனது பார்ம் குறித்து கவலைப்படும்போது அந்த நாளில் அதிக அழுத்தம் ஏற்பட்டு நொறுங்கி விடுவார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -