மகளிர் ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடர் இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதி விளையாடின.
இதில் சிறப்பாக விளையாடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி கடைசி ஓவரின் கடைசி பந்தில் திரில் வெற்றியை பெற்றது.
மகளிர் ஐபிஎல் டி20
மூன்றாவது மகளிர் ஐபிஎல் சீசன் கிரிக்கெட் திருவிழா தற்போது நடைபெற்ற வரும் நிலையில் வதோதராவில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதில் மும்பை அணி தனது பேட்டிங்கை துவங்கியது. இதில் ஹீலி மேத்யூஸ் டக் அவுட் ஆகி வெளியேற, மற்றொரு தொடக்க வீராங்கனை யாஷிகா பாட்டியா 11 ரன்னில் வெளியேறினார். அதற்குப் பின்னர் களம் இறங்கிய சிவியர் பிரன்ட் மற்றும் ஹர்மன் பிரீத்கவுர் ஜோடி மும்பை அணிக்கு சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தது.
இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 40 பந்துகளில் 73 ரன்கள் குவித்தது. பிரீத் கவுர் 42 ரன்னில் வெளியேற, அதற்குப் பின்னர் களமிறங்கிய வீராங்கனைகள் அனைவரும் வரிசையாக வெளியேறினார்கள். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி 19. 1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 164 ரன்கள் குவித்தது. இறுதியாக சிவியர் 59 பந்துகளில் 80 ரன்கள் குவித்தார்.டெல்லி அணியில் சுதர்லேண்ட் 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
டெல்லி அணி திரில் வெற்றி
அதற்குப் பின்னர் வெற்றி இலக்கை நோக்கி டெல்லி அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை கேப்டன் லேன்னிங் 15 ரன் எடுத்து வெளியேற, மற்றொரு தொடக்க வீராங்கனை செபாலி வர்மா 18 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸ் என 43 ரன்கள் குவித்தார். அதற்குப் பிறகு மூன்று விக்கெட்டுகள் விரைவாக வெளியேற, மிடில் வரிசை வீராங்கனை நிக்கி பிரசாத் 33 பந்துகளில் 35 ரன்கள் குவித்தார்.
இதையும் படிங்க:10 மாதம் கிரிக்கெட் ஆட விட்டு.. இப்போ இல்லாதவரை பத்தி ஏன் பேசுறீங்க.. முன்னாள் இந்திய கேப்டன் காட்டமான கருத்து
அதற்குப் பிறகு வரிசையாக டெல்லி அணி விக்கெட்டுகளை இழக்க பரபரப்பான கடைசி ஓவரில் டெல்லி அணி வெற்றி பெற 10 ரன்கள் தேவைப்பட்டது. முதல் பந்தில் பௌண்டரி அடித்த நிக்கி பிரசாத், இரண்டாவது பந்தில் இரண்டு ரன் மற்றும் மூன்றாவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். மீண்டும் ஐந்தாவது பந்தில் நிக்கி பிரசாத் ஆட்டம் இழந்து வெளியேற, கடைசி பந்தில் டெல்லி அணி 2 ரன் எடுத்து பரபரப்பான ஆட்டத்தில் திரில் வெற்றி பெற்றது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது