இளம் வீரர்களை வளர்த்தெடுப்பதில் இவர்தான் சிறந்த கேப்டன் – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
543
Rohit Sharma Virat Kohli and Aakash Chopra

இந்திய அணிக்கு கிடைத்த இரண்டு முக்கிய கேப்டன்கள் தோனி மற்றும் கோலி. பல ஆண்டு காலமாக கைக்கு எட்டாமல் இருந்த பல ஐசிசி கோப்பைகளை பெற்றுக் கொடுத்தவர் தோனி. இவரது கேப்டன்சியில் டி20 உலகக் கோப்பை, 50 ஓவர் உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என்று எல்லா முக்கிய கோப்பைகளையும் இந்திய அணி வென்று வந்தது. அதேபோல முதன்முதலில் இந்திய அணி டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திற்கு வந்ததும் தோனி தலைமையில் தான். தற்போது விராட் கோலி இந்திய அணியில் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணி இவ்வளவு சிறப்பாக விளையாடுவது விராட் கோலியின் தலைமையில் தான். ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றது, கிட்டத்தட்ட தற்போது முடிந்த இங்கிலாந்து தொடரையும் வென்றது என விராட் கோலியின் சாதனைகள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன.

இரண்டு கேப்டன்களும் அதிகமாக இளம் வீரர்கள் மீது நம்பிக்கை வைத்து இந்திய அணிக்கு பல இளம் வீரர்களை பெற்று தந்துள்ளனர். குறிப்பாக தோனி பல எதிர்ப்புகளையும் மீறி ரோகித், தவான் போன்ற இளம் வீரர்களை 2013 காலகட்டத்தில் இந்திய அணிக்கு பெற்றுத் தந்தார். சீனியர் வீரர்களை புறக்கணிக்கிறார் என்ற குற்றச்சாட்டுகளை எல்லாம் கடந்து தோனி பெற்றுத்தந்த இதன் வீரர்கள்தான் தற்போது இந்திய அணியின் முக்கிய தூண்கள். அதேபோல விராத் கோலியும் சிராஜ் போன்ற வீரர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பை வழங்கி அவர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் பிரகாசிக்க வழிவகை செய்துள்ளார்.

தற்போது ட்விட்டரில் பிரபல ஹிந்தி வர்ணனையாளர் ஆகாஷ் சோப்ரா கேள்வி பதில் நேரம் ஒன்றை டுவிட்டரில் நடத்தினார். அப்போது ரசிகர் ஒருவர் இளம் வீரர்களை நன்கு வளர்த்து எடுப்பதில் சிறந்த கேப்டன் தோனியா அல்லது கோலியா என்று கேள்வி கேட்டார்.

அதற்கு பதிலளித்த ஆகாஷ் சோப்ரா சிறிதும் யோசிக்காமல் தோனி என்று பதில் சொன்னார். சஹால், குல்திப் போன்ற எத்தனையோ வீரர்களை அணிக்குள் கொண்டுவந்து அவர்கள் மூலம் பல வெற்றிகளைப் பெற்றுத் தந்த கேப்டன் தோனி. இதே எண்ணத்தில் தான் தோனியின் பெயரை கூறியிருப்பார் ஆகாஷ் சோப்ரா. இந்தக் கேள்விக்கு ஒரு மிகப்பெரிய வர்ணனையாளர் தோனியின் பெயரை கூறியுள்ளதால் ரசிகர்கள் இதை அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.