டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ருத்துராஜ் கெய்க்வாட் தன் இடத்தை இழந்துவிட்டார் – ஆகாஷ் சோப்ரா

0
91
Aakash Chopra about Ruturaj Gaikwad

2020ஆம் ஆண்டு ஐ.பி.எல் வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்குச் சென்னை சூப்பர் கிங்கஸ் அணி பெரும் சரிவைச் சந்தித்து இருந்தது. முதலில் ஆடிய 11 ஆட்டங்களில் மூன்றை மட்டுமே வென்று ப்ளேஆப்ஸ் வாய்ப்பிலிருந்தும் முதல் முறையாக வெளியேறி இருந்தது. இந்த நிலையில் கடைசி மூன்று ஆட்டங்களில் துவக்க ஆட்டக்காரராக அனுப்பட்ட மகாராஷ்ட்ரா மாநிலத்திற்காகவும், இந்திய ஏஅணிக்காகவும் விளையாடிய ருதுராஜ் பேட்டிங் வரிசையில் மேலே அனுப்பப்பட்டார்.

அந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனில் கடைசி மூன்று ஆட்டங்களில் அரைசதமடித்து அசத்தி அணி வெல்ல முக்கியக் காரணமாய் இருந்தார். இதற்கடுத்த 2021 ஆம் ஆண்டு ஐ.பி.எல் சீசனில் சென்னை அணி கோப்பையை வெல்ல, ருதுராஜ் 16 போட்டிகளில் ஒரு சதத்தோடு 636 ரன்கள் அடித்து, அதிக ரன்கள் அடித்தவருக்கான ஆரஞ் நிற தொப்பியையும் கைப்பற்றினார். இந்த ஆண்டு அதே பார்மை தொடர முடியாதவர் 14 ஆட்டங்களில் 368 ரன்கள் மட்டுமே அடித்தார். இவரின் ரன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளேஆப்ஸ் வாய்ப்பிலிருந்து வெளியேறுவதை தடுக்க முடியவில்லை.

- Advertisement -

இதற்கு நடுவில் உள்நாட்டு ஒருநாள் போட்டி தொடரான விஜய் ஹசாரே 2021 தொடரில் ஐந்து போட்டிகளில் நான்கு சதங்களோடு 150 ஸ்ட்ரைக்ரேட்டில் 112 ஆவ்ரேஜில் 605 ரன்களை அடித்து நொறுக்கினார். இதற்கு முன்பு ராகுல் டிராவிட் பயிற்சியின் கீழ் இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அறிமுகம் ஆனார். இதையடுத்து 2021ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஒருநாள் போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றார். ஆனால் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.

இந்த நிலையில் இந்த ஐ.பி.எல் சீசன் முடிந்ததும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டி தொடரில், துவக்க ஆட்டக்காரர் கே.எல்.ராகுல் இடுப்பு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் தொடரிலிருந்து வெளியேற, ருதுராஜ் தொடரில் மழுமையாக விளையாடும் வாய்ப்பைப் பெற்றார். ஆனால் ஐந்து ஆட்டங்களில் விளையாடிய அவர் 96 ரன்களை மட்டுமே அடித்தார். இதில் ஒரு 57 ரன் அரைசதமும் அடங்கும்.

இந்த நிலையில் ருதுராஜ் மற்றும் இந்திய டி20 அணியின் துவக்க இடம் குறித்துப் பேசியுள்ள இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா “இந்திய அணிக்கான டி20 துவக்க இடத்தில் பெரிய டிராபிக் ஜாம் நிலவுகிறது. இதை வைத்துப் பார்த்தால், ருதுராஜ்க்கு அங்கு இடம் இல்லையென்றே தெரிகிறது. மற்றவர்கள் நான்கு போட்டிகள் மட்டுமே விளையாட ருதுராஜ் ஐந்து போட்டிகள் விளையாடி, ஐந்தாவது போட்டியில் ஆட்டமும் இழந்துவிட்டார். விராட் கோலியை ஓபன் செய்ய வைக்கலாம் என்று ஒருசிலர் நினைக்கிறார்கள். அவர் பெங்களூர் அணிக்காக ஓபனிங் செய்யவும் செய்கிறார். அடுத்து ரோகித் சர்மா, கே.எல்.ராகுல். இஷான் கிஷான் வருகிறார்கள். இதில் எத்தனை பேர்தான் ஓபன் செய்வது? எல்லாருமே ஓபன் செய்ய விரும்புகிறார்கள். ரிஷாப் பண்ட் வேறு ஒருமுறை ஓபன் செய்திருக்கிறார். இதில் ருதுராஜ்கான இடம் இல்லையென்றுதான் தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்!

- Advertisement -