விராட் கோலி நேற்று ஆடியது போல் ஒரு இளம் வீரர் ஆடவே கூடாது – கௌதம் காம்பீர் விமர்சனம்!

0
181
Virat kohli

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகமே எதிர்பார்த்த ஆசிய கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதிய போட்டி நேற்று மிக பரபரப்பாக எதிர்பார்ப்புக்கு தக்க அளவில் நடந்து முடிந்திருக்கிறது. உலகம் முழுக்க இந்தியா பாகிஸ்தான் போட்டிகளுக்கு ஏன் இவ்வளவு எதிர்பார்ப்பு நிலவுகிறது என்பதற்கு சாட்சியாக நேற்றைய போட்டி அமைந்திருந்தது!

போட்டிக்கான டாசில் வென்ற இந்திய கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்ய களமிறங்கிய பாகிஸ்தான் அணி பாபரின் விக்கெட்டை பறிகொடுத்து நெருக்கடியில் விழுந்தது. அந்த அணியில் யாராலும் குறிப்பிடும்படி அதிரடியாக விளையாட முடியவில்லை. ஆனால் கடைசி விக்கெட்டுக்கு இணைந்த ஜோடி யாரும் எதிர்பார்க்காத வகையில் சில பவுண்டரி சிக்சர்கள் விளாச பாகிஸ்தான் அணி 147 ரன்களை சேர்த்தது.

- Advertisement -

இதையடுத்து களம் கண்ட இந்திய அணிக்கு கேஎல் ராகுல் பூஜ்ஜியத்தில் வெளியேறி ஏமாற்றம் அளிக்க, சிறிது நேரம் தாக்குப் பிடித்த கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் சுழற் பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சியை தந்தார்கள். ஆனால் அதற்குப் பிறகு ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா ஹர்திக் பாண்டியா இருவரும் அரைசதம் அடித்து அணியை மீட்டதோடு அணியை வெற்றி பெறவும் வைத்தார்கள்.

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் துவக்க இடதுகை ஆட்டக்காரர் கௌதம் காம்பீர் விராட் கோலி ஆட்டமிழந்தது குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படையாக முன்வைத்துள்ளார்.

இது பற்றி அவர் கூறும் பொழுது ” ரோகித் சர்மா ஆட்டமிழந்த பொழுது அவர் அதற்காக ஏமாற்றம் அடைந்து இருப்பார். உடனே விராட் கோலி அப்படி ஒரு ஷாட்டை ஆடி ஆட்டம் இழந்தால் எப்படி? இப்படி ஒரு ஷாட்டை ஒரு இளைஞர் விளையாடாமல் இருப்பது நல்லது. இளைஞன் இப்படி விளையாடி இருந்தால் மிகப்பெரிய விமர்சனங்கள் வந்திருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசிய அவர் ” சர்வதேச கிரிக்கெட்டில் அவர் குவித்துள்ள ரன்கள் எனக்கு தெரியும். நேற்று அவர் ஆடிய விதம் குறித்து அவரே வருத்தப்பட்டு இருப்பார். அது தேவையற்ற ஷாட். நீங்கள் 34 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தீர்கள். அதற்கு கொஞ்சம் முன்புதான் உங்களின் கேப்டன் ஆட்டமிழந்தார். மாதிரி சூழ்நிலையில் ஒரு இன்னிங்சை இன்னும் கொஞ்சம் கட்டியெழுப்பி இருந்தால் எல்லாம் எளிதாக முடிந்து இருக்கும். ஆனால் விராட் கோலி அந்த சமயத்தில் தேவையில்லாத ஷாட் ஆடி ஆட்டமிழந்தார்” என்று விமர்சித்திருக்கிறார்!