ஒரே ஒரு சர்வதேச போட்டியில் ஆடிய வீரர்களை வைத்து உருவாக்கப்பட்ட இந்திய அணி

0
2569
Sreenath Aravind and Mayank Markande

தேசிய அணிக்கு விளையாடும் வாய்ப்பைப் பெறுவது அவ்வளவு எளிதல்ல. அதற்கு கடும் போட்டி நிலவுகிறது. பிசிசிஐ மூன்று வித ஃபார்மட்க்கும் முக்கியத்துவம் அளிக்கிறது. அப்படி இருப்பினும் இளம் வீரர்களுக்கு வாய்ப்புக் கிடைப்பது கடினமாக உள்ளது. ஐ.பி.எல் போட்டிகளில் சிறப்பாக ஆடிய ஒரு சில வீரர்களுக்கு இந்திய அணியில் ஆடும் வாய்ப்பு கிடைக்கிறது.

ஆனால் அவர்களில் பெரும்பாலான வீரர்கள் ஓரிரு போட்டிகளுக்குப் பின் காணாமல் போய்விடுகின்றனர். இந்தக் கட்டுரையில், ஒரே ஒரு போட்டியில் ஆடிய வீரர்களை வைத்து ஓர் அணியை உருவாக்கி உள்ளோம். அதைப் பின்வருமாறு பார்ப்போம்.

- Advertisement -

ஒப்பனர்கள் – ஃபைஸ் ஃபசல் ( கேப்டன் ) & அரவிந்த் அப்டே

அதிர்ஷ்டமில்லா வீரர்களில் ஒருவர், ஃபைஸ் ஃபசல். உள்ளூர் போட்டிகளில் அதிக ரன்களைக் குவுத்தும், பெரிய வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. ஐ.பி.எலிலும் அவர் அதிக போட்டிகளில் ஆடவில்லை. இந்திய அணிக்காக 2016ல் ஒரே ஒரு போட்டியில் அவர் களமிறங்கினார். நாங்கள் உருவாக்கும் அணியில் இவர் கேப்டனாக உள்ளார்.

மற்றொரு தொடக்க வீரராக மாதவ் அப்டேவின் சகோதரர் அரவிந்த் அப்டே இடம்பெறுகிறார். மும்பை அணிக்காக பல முதல் தர போட்டிகளில் பங்காற்றியுள்ளார். ஒரே ஒரு சர்வதேச போட்டியில் களமிறங்கிய வீரர்களில் இவரும் ஒருவர்.

மிடில் ஆடர் – கெனியா ஜெயன்டிலால், ரமேஷ் சக்ஸேனா, அபிஜித் கலே, பங்கஜ் தர்மணி ( விக்கெட் கீப்பர் )

ஜெயன்டிலால மற்றும் ரமேஷ் சக்ஸேனா இருவரும் ஆடிய காலக்கட்டத்தில் டெஸ்ட் கிரிக்கெட் பிரபலமாக இருந்தது. அப்போதைய இந்திய அணியின் மிடில் ஆடர் மிகவும் நிலையாக இருந்தது. ஆகையால் யாருக்கும் அவ்வளவாக வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எதேனும் ஒரு வீரருக்கு காயம் ஏற்ப்பட்டால் மட்டுமே மாற்று வீரர் அணிக்குள் நுழைய முடியும்.

- Advertisement -

அபிஜித் கலே மற்றும் பங்கஜ் தர்மணி இக்காலத்தில் ஆடும் வீரர்கள். துரதிஸ்டவசமாக இவர்களது கிரிக்கெட் வாழ்க்கை ஒரே ஒரு போட்டியுடன் முடிவடைந்தது. இந்த இரண்டு வீரர்களும் திறமையான வீரர்களே. அதிலும் விக்கெட் கீப்பர் பங்கஜ் தர்மணி, நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தக் கூடியவர். தற்போது அபிஜித் கலே, கிரிக்கெட் நிர்வாகத்தில் பணிபுரிந்து வருகிறார். ஆனால் பங்கஜ் தர்மணி எங்கிருக்கிறார் என்பது கூட வெளியில் தெரியவில்லை.

ஆல்ரவுண்டர் – பவன் நெகி

இப்பட்டியலில் இருக்கும் ஒரே ஆல்ரவுண்டர் பவன் நெகி மட்டுமே. டெல்லியைச் சேர்ந்த இந்த ஆல்ரவுண்டர், இந்திய அணிக்காக ஒரே ஒரு போட்டியில் மட்டும் ஆடி உள்ளார். ஆசிய கோப்பையில் ஐக்கிய அரபு நாடு எதிராக ஒரு விக்கெட் வீழ்த்தினர். அப்போடிக்குப் பிறகு பவன் நெகி, சர்வதேச அளவில் களமிறங்கிவில்லை. இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மிகவும் அற்புதமாக ஆடினார். அதன் பின்னர், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு மாற்றப்பட்டார். ஐ.பி.எல் மற்றும் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால், மீண்டும் இவர் இந்திய அணிக்கு திரும்பி வரலாம்.

பந்துவீச்சாளர்கள் – இக்பால் சித்திக், அஜித் பை, ஶ்ரீநாத் அரவிந்த் மற்றும் மயங்க மார்கண்டே

இக்பால் சித்திக் மற்றும் அஜித் இருவரும் உயரமான வேகப்பந்து வீச்சாளர்கள். இந்த இரு வீரர்களும் இந்திய அணிக்காக அறிமுகப் போட்டியில் மட்டும் கலந்து கொண்டு ஆடினார். அதன் பின்னர் இவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை. ரஞ்சித் தொடரில் சித்திக், மகாராஷ்டிரா அணிக்காகவும் அஜித் பை, மும்மை அணிக்காகவும் ஆடினர்.

ஶ்ரீநாத் அரவிந்த், ஐ.பி.எலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஆடி வந்தார். அவரின் ஆட்டம் அனைவரையும் கவர்ந்தது. அதன் பிறகு, இந்திய அணிக்காக ஒரே ஒரு போட்டியில் ஆடினார். தற்போது உள்ளூர் கிரிக்கெட் அணிகளின் தலைமை பயிற்சியாளராக உள்ளார்.

2018 ஐ.பி.எலில் மயங்க மார்கண்டேவுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. அதற்கு அடுத்த சீசனில் இருந்து அவர் பெரிதாக எந்த ஆட்டங்களிலும் ஆடவில்லை. தகுந்த வாய்ப்புகள் கொடுத்தால் நிச்சயம் நிரூபிப்பார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் நம்புகின்றனர். ராகுல் சுஹன், குருனால் பாண்டியா மற்றும் ரவி பிஷ்னாய்க்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. ஆதலால், இவர் அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில் செயல்பட்டால் மட்டுமே அவரால் இந்திய அணிக்குள் நுழைய முடியும்.