உலக டெஸ்ட் பைனல்; மழை வந்தாலோ போட்டி டிரா ஆனாலோ கோப்பை யாருக்குத் தரப்படும்?

0
1832
Wtc2023

இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நாளை இங்கிலாந்து லண்டன் ஓவல் மைதானத்தில் ஆஸ்திரேலிய இந்திய அணிகளுக்கு இடையே நடக்க இருக்கிறது!

சில மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் வைத்து நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரின் முடிவில் ஆஸ்திரேலியா அணியும் இந்திய அணியும் இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் விளையாட தகுதிப் பெற்றன.

- Advertisement -

முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கும் இந்திய அணி தகுதிப் பெற்று இருந்தது. அந்தப் போட்டியில் மலை குறுக்கீடு காரணமாக ஆட்டம் ஆறாவது நாளுக்கு சென்று, நியூசிலாந்தின் எட்டு விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி டிராவில் முடிந்தாலோ அல்லது மழை வந்து நடைபெறாமல் போனாலோ கோப்பை யாருக்குத் தரப்படும்? என்ன மாதிரியான விதிமுறைகள் இருக்கிறது? என்று பார்ப்போம்.

கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி போலவே, இந்த முறையும் போட்டிக்கு ரிசர்வ் நாளாக போட்டியின் ஆறாவது நாள் ஜூன் 12ஆம் தேதி வைக்கப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

ஆட்டம் நடைபெறும் முதல் ஐந்து நாட்களில் மழையின் காரணமாக மற்றும் வானிலை காரணமாகப் போட்டி நடைபெறுவதில் எவ்வளவு நேரம் தாமதிக்கப்படுகிறதோ, அந்த நேரம் ரிசர்வ் நாளில் நடைபெறும்.

ஒருவேளை ரிசர்வ் நாள் அன்றும் போட்டி நடைபெறுவதற்கான சூழல் இல்லாமல் இருந்து போட்டி முழுவதுமாக வெற்றி தோல்வி என்று கைவிடப்பட்டால், இரு அணிகளுக்குமே கோப்பை பகிர்ந்து அளிக்கப்படும்.

மற்றபடி போட்டி நடக்கும் முதல் ஐந்து நாட்கள் எந்த வானிலை குறுக்கீடும் இல்லாமல் சிறப்பாக நடந்தால், போட்டி ஆறாவது நாளான ரிசர்வ் நாளுக்குச் செல்லாது. அந்த ஐந்து நாட்களுக்குள் போட்டி டிரா ஆகி இருந்தாலும் கோப்பை இரு அணிகளுக்குமே பகிர்ந்துதான் தரப்படும். மற்றபடி வெற்றி தோல்வி என்று முடிவு தெரிந்தால் வெற்றி பெற்ற அணிக்கு சாம்பியன் பட்டம் தரப்படும்!