தோனி சொன்ன ஒரு வார்த்தை.. கடைசிவரை காப்பாற்றிய ரெய்னா.. மும்பை ஹர்திக் கத்துக்கனும்.. ரசிகர்கள் கருத்து!

0
1279
Raina

இந்திய அணியின் முன்னாள் வீரர் இடதுகை சுழற் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் தொடரில் மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படுவார். ஐபிஎல் தொடருக்கு என்றே உருவாகி வந்தவர் போல அவரது புள்ளி விபரங்கள் இருக்கும். அவருக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் மட்டும் இல்லாமல், வேற எந்த அணியிலும் ஒரு வீரர் கிடையாது.

ஐபிஎல் தொடரில் மிகவும் மதிப்பு வாய்ந்த வீரர்களின் பட்டியலை ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால் பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் மற்றும் சில நேரங்களில் கேப்டன்சி என எல்லாத் துறைகளிலும் கலக்கிய சுரேஷ் ரெய்னாவுக்கு முதலிடம் தர வேண்டும். மற்ற எந்த வீரர்களையும் விட அவர் முன்னணியில் இருப்பவர். ஏதாவது ஒரு பகுதியில் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை அவரால் ஏற்படுத்தி விட முடியும்.

- Advertisement -

மேலும் இந்தத் திறமைகள் மட்டும் இல்லாமல் அவர் பொதுவாக அணிக்காக செயல்படக்கூடியவர். இளம் வீரர்கள் வரையில் எல்லோருடனும் நல்ல நட்பை கொண்டிருக்கக் கூடியவர். அணியிலோ அல்லது எதிரணியிலோ யார் என்ன உதவி கேட்டாலும் அவர் செய்வார். சுரேஷ் ரெய்னா சென்னை அணியின் எனர்ஜி மெஷினாக விளையாடி வந்தார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் வீரர்களின் முக்கியத்துவத்தை எடுத்து வைத்து பார்த்தால் அதில் மகேந்திர சிங் தோனிக்கு சமமாக சுரேஸ் ரெய்னா இருப்பார். ஆனால் அவர் அந்த ஈகோவை எந்த இடத்திலும் காட்டியதாகவே தெரியாது. கடைசி வரை அவர் ஒரு கேப்டனாக அணியை வழிநடத்த வெளியில் சென்றதும் கிடையாது. தோனியின் தளபதியாகவே அவர் தொடர்ந்து விளையாடினார்.

இது எப்படி நடந்தது என்று ஒருமுறை சுரேஷ் ரெய்னா கூறும்பொழுது “நான் உத்திர பிரதேசம் மற்றும் சென்னைக்கு கேப்டனாக இருந்திருக்கிறேன். அதே சமயத்தில் மேலும் பல அணிகள் என்னை கேப்டனாக இருக்க ஐபிஎல் தொடரில் அணுகின. ஆனால் தோனி பாய் ‘நான் கேப்டன்; நீ துணை கேப்டன். வேறு எங்குமே போகக்கூடாது’ என்று கூறுவார்.

- Advertisement -

எனக்கு கேப்டனாக இருக்க வேண்டும் என்று எந்த ஆசையும் இல்லை. நான் நன்றாக விளையாடி என் நாட்டை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று தான் விரும்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் நான் கடினமாக உழைக்கிறேன். நான் என்னை எப்பொழுதும் ஒரு அணி வீரராகத்தான் உணர்ந்திருக்கிறேன். சக வீரர்களுக்கு உதவுவது அல்லது அவர்களின் பிரச்சனையை தீர்த்து வைப்பதில்தான் எனக்கு மகிழ்ச்சி” என்று கூறி இருப்பார்.

மிகப்பெரிய தொகைக்கு ஒரு அணியின் கேப்டனாக ஐபிஎல் தொடரில் இருப்பதற்கு எல்லா தகுதிகளும் வாய்ப்புகளும் இருந்தும் கூட, தன்னுடைய கேப்டன் கேட்டுக் கொண்டதற்காக கடைசிவரை சுரேஷ் ரெய்னா அதை காப்பாற்றினார். எப்பொழுதும் விளையாடும் கேப்டன்களுக்கு கீழ் நம்பிக்கையோடும் மரியாதையோடும் இருப்பது அவசியம். அதற்கு மற்ற எல்லோருக்கும் முன் உதாரணமாக இருக்கக்கூடியவர் சுரேஷ் ரெய்னா. இன்றைய காலகட்ட வீரர்களுக்கு அவர் ஒரு முன்மாதிரி!