வீடியோ.. “சும்மா இரேன்பா” கிரிக்கெட் உலகில் இப்படி ஒரு பீல்டிங் பார்க்கவே முடியாது

0
90
Cricket
Cricket

கிரிக்கெட்டில் பேட்டிங் மற்றும் பௌலிங் என இரண்டு முக்கிய துறைகளை தவிர்த்து, பீல்டிங் துறையின் தேவை மற்றும் தாக்கம் என்னவென்று நிறைய கிரிக்கெட் ரசிகர்களுக்கு முழுமையாக தெரியாது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் லெஜெண்ட் பேட்ஸ்மேன் ரிச்சர்ட்ஸ் ஒருமுறை ஆட்டநாயகன் விருதை மூன்று ரன் அவுட் செய்ததற்காக மட்டுமே பெற்று இருக்கிறார். ஆட்டத்தையே மாற்றக்கூடிய வல்லமை சிறப்பான பீல்டிங் செய்கைகளுக்கு உண்டு.

- Advertisement -

கிரிக்கெட்டில் பீல்டிங்கில் முதலில் பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவராக தென் ஆப்பிரிக்காவின் ஜான்டி ரோட்ஸ் இருக்கிறார். பேட்டிங் பந்துவீச்சில் ஜாம்பவான் வீரர்கள் இருக்கிறார்கள் என்றால் பீல்டிங்க்கு இவர்தான்.

1992 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் இன்சமாம் உல் ஹக்கை இவர் ரன் அவுட் செய்ய பந்தை த்ரோ செய்யாமல், கையில் பந்தை பிடித்து ஓடி வந்து, ஸ்டெம்ப் நோக்கி டைவ் அடித்து ரன் அவுட் செய்வார். அந்த ரன் அவுட்டுக்குப் பிறகு இவர் உலகம் முழுவதும் அறியப்பட்டார்.

பிறகு உலக அளவில் ரிக்கி பாண்டிங், கிப்ஸ் போன்றவர்கள் மிகச்சிறந்த பீல்டர்களாக இருந்திருக்கிறார்கள். தனி ஒரு ஆளாக போட்டியில் பெரிய தாக்கத்தை பீல்டிங் மூலம் உருவாக்கி இருக்கிறார்கள். இதே கிப்ஸ் ஆஸ்திரேலியா ஸ்டீவ் வாக்குக்கு 1999 உலகக்கோப்பை செமி பைனலில் விட்ட கேட்ச், உலகக் கோப்பையை தென் ஆப்பிரிக்கா விட்டதாக மாறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் சமூக வலைதளத்தில் ஒரு பீல்டிங் செய்யும் வீடியோ மிகவும் வைரலாக மாறி வருகிறது. ஆனால் அது எந்த அணிகளுக்கு இடையே நடைபெற்றது என்பது போன்ற தகவல்கள் எதுவும் இல்லை.

பந்துவீச்சாளர் பந்தை வீச, இடது கை பேட்ஸ்மேன் ஒருவர் பந்தை தூக்கி மிட் விக்கெட் திசையில் அடிக்கிறார். இந்த நேரத்தில் பந்தை துரத்திச் செல்லும் ஒரு ஃபீல்டர், பந்தை கால் வைத்து எல்லை கோட்டுக்கு சற்று நெருக்கமாக தடுத்து நிறுத்துகிறார்.

இதையும் படிங்க : ரஞ்சி செமி பைனல்.. தமிழ்நாடு அணியின் 7 வருட தவத்தை கலைத்த துஷார் தேஷ்பாண்டே.. மும்பைக்கு எதிராக தடுமாற்றம்

பந்தை தடுத்து நிறுத்திய ஃபீல்டர் எல்லைக்கோட்டை கடந்து ஓடிவிட்டதால், பந்தை துரத்திக்கொண்டு அவருக்குப் பின்னால் வந்த இன்னொரு வீரர் பந்தை எடுத்து விக்கெட் கீப்பருக்கு எறியாமல், தவறுதலாக திருப்பி எல்லைக்கோட்டிற்கு வெளியே இருந்த ஃபீல்டருக்கே கொடுக்க, அது பவுண்டரியாக மாறியது. பந்தை கஷ்டப்பட்டு தடுத்து நிறுத்திய பீல்டர், இதனால் கடுப்படைந்து தொப்பியை கழட்டி எறிந்து செல்வது வீடியோவில் வருகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக்கொண்டிருக்கிறது