மனம் உடைந்து போன தென் ஆப்பிரிக்க வீரர்கள்.. இந்திய ரசிகர்கள் செய்த செயல்.. கிரிக்கெட் உலகம் நெகிழ்ச்சி

0
2251

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் போட்டி முடிந்த பிறகு இந்திய ரசிகர்கள் தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு செய்த செயல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சாளர்களின் அபார முயற்சியினால் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணியினர் மகிழ்ச்சியில் மிதந்து கொண்டிருக்கும் நிலையில், இதுவரை ஒரு உலகக் கோப்பையை கூட வெல்லாத தென்னாப்பிரிக்க அணி இந்த முறையும் இறுதி போட்டியில் தோல்வி அடைந்ததால் தென் ஆப்பிரிக்கா வீரர்கள் கிளாசன், மார்க்ரம், மில்லர், டிகாக் ஆகியோர் மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுதனர். இது பார்ப்போரையும் சற்று வருத்தமடைய வைத்துள்ளது. தற்போது மகிழ்ச்சி வெள்ளத்தில் இருக்கும் இந்திய ரசிகர்களே தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் போட்டியை முடித்துவிட்டு தென்னாப்பிரிக்கா அணியினர் மைதானத்தை விட்டு வெளியேறி பேருந்தில் ஏற சென்று கொண்டிருந்தபோது, மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் வெளியே வந்து தென்னாப்பிரிக்க வீரர்களை உற்சாகப்படுத்தினர். இது தோல்வியில் துவண்டு போயிருந்த தென்னாபிரிக்க வீரர்களுக்கு இந்திய ரசிகர்கள் இவ்வாறு செய்த செயல் சற்று ஆறுதலை கொடுத்திருக்கும் என்றே கூறலாம்.

இந்திய ரசிகர்கள் எப்போதும் பக்குவப்பட்டவர்கள் என்று வெளிநாட்டு வீரர்களை கூறும் நிலையில், தற்போது அந்த வார்த்தைகளை உண்மைப்படுத்தும் விதமாக இந்திய ரசிகர்களின் செயல் அனைவரையும் பாராட்டும்படி செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தென்னாபிரிக்க அணி தற்போது வெஸ்ட் இண்டீசில் இருந்து கிளம்பும் நிலையில் இந்திய அணியும் தாய் நாடு திரும்ப ஆயத்தமாகி வருகிறது.

இதையும் படிங்க:இந்தியா பவுண்டரி லைனை மாற்றி ஏமாற்றி விட்டதா? – தெ.ஆ ஷான் பொல்லாக் தந்த அதிரடி தீர்ப்பு

ஜூலை இரண்டாம் தேதி இந்திய அணியினர், டெல்லி வந்தடைய உள்ளனர். அங்கு அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட இருக்கிறது. இந்த நிகழ்வு முடித்தவுடன் சில நாட்களில் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி இந்திய வீரர்களை சில நாட்களில் சந்திக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் அவ்வப்போது உலக கோப்பையுடன் இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வைரல் ஆக்கி வருகின்றனர்.

- Advertisement -