ஐசிசி ஒன்பதாவது டி20 உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் டேவிட் மில்லருக்கு சூரியகுமார் பிடித்த கேட்ச் சிலரால் மிகப்பெரிய சர்ச்சையான விஷயமாக மாற்றப்பட்டு இருக்கிறது. தற்பொழுது இது குறித்து தென் ஆப்பிரிக்க அணியின் லெஜெண்ட் முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் தனது கூறி இருக்கிறார்.
நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த போட்டியில் 30 பந்துகளுக்கு 30 ரன்கள் வேண்டும் என்கின்ற நிலையில், களத்தில் ஹென்றி கிளாசன் மற்றும் டேவிட் மில்லர் இருவரும் இருந்தும் கூட, அந்த இடத்திலிருந்து போட்டியை தவறவிட்டு டி20 உலகக் கோப்பையையும் தென் ஆப்பிரிக்கா தவறவிட்டது.
தென் ஆப்பிரிக்கா தன்னுடைய 32 வருட சர்வதேச கிரிக்கெட் பயணத்தில் முதல்முறையாக ஒரு ஐசிசி உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வேறு எந்த தென் ஆப்பிரிக்க அணியும் செய்யாததை மார்க்ரம் தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி செய்ததால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
இப்படியான நிலையில் போட்டியில் மிகவும் வலிமையான இடத்தில் இருந்து தென் ஆப்பிரிக்கா தோற்றது. இந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா வீசிய கடைசி ஓவரின் முதல் பந்தை டேவிட் மில்லர் நேராக தூக்கி அடிக்க, லாங் ஆனில் இருந்த சூரியகுமார் யாதவ் எல்லைக் கோட்டுக்கு வெளியே பந்தை பிடித்து, எல்லைக் கோட்டுக்கு உள்ளே சென்று தூக்கி எறிந்து மீண்டும் வந்து பிடித்து அபாரமாக செயல்பட்டு அவரை அவுட் ஆக்கினார். இந்திய அணி டி20 உலக கோப்பையை வெல்ல இந்த கேட்ச் மிகவும் முக்கியமானதாக இருந்தது.
அதேசமயத்தில் சூரியகுமார் யாதவ் எல்லைக்கோட்டிற்கு அருகே பந்தை பிடிக்கும் பொழுது, அங்கே அடையாளத்திற்கு வைக்கப்பட்டு இருக்கும் பவுண்டரி குஷன் நகர்ந்து இருந்தது. இதனால் இந்திய அணி பவுண்டரி குஷனை நகர்த்தி வைத்து வென்று விட்டதாக சமூக வலைத்தளங்களில் சிலர் குற்றம் சாட்டினார்கள். மேலும் பவுண்டரி லைனை சூரியகுமார் யாதவ் மிதித்து விட்டதை கண்டுகொள்ளாமல் இந்தியாவுக்கு சாதகமாக நடுவர்கள் நடந்து கொண்டார்கள் என்றும் குற்றம் சாட்டினார்கள்.
இதையும் படிங்க : கவலைப்படாதீங்க ரோகித் கோலி விளையாடுவாங்க.. இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஜெய் ஷா மகிழ்ச்சியான அறிவிப்பு
தற்போது இது குறித்து பேசி இருக்கும் தென் ஆப்பிரிக்க முன்னாள் வீரர் ஷான் பொல்லாக் “சூரியகுமார் பிடித்த கேட்ச் மிகவும் சரியாக இருந்தது. அந்த சமயத்தில் பவுண்டரி குஷன் நகர்ந்து இருந்தது உண்மைதான். அது திட்டமிடப்பட்ட ஒன்று கிடையாது ஆட்டத்தின் போக்கிலேயே அப்படித்தான் இருந்தது. இதற்கும் சூர்யாவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும் அவர் குஷனையும் மிதிக்கவில்லை. விவாதம் முடிந்தது அவ்வளவுதான். சூர்யா பிடித்த கட்சி சிறப்பான ஒன்றாக இருந்தது குஷனும் நகரவில்லை. இது சிறந்த புத்திசாலித்தனமான திறமை” என்று சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.