மொத்தம் 21.3 ஓவர்.. 6.1 ஓவரில் முடித்த இந்தியா.. 8வது முறையாக ஆசிய சாம்பியன்.. ஆசிய கோப்பையில் இலங்கை பரிதாபம்!

0
2835
ICT

நடப்பு ஆசியக் கோப்பை தொடர் ஆரம்பிக்கும் முன்பாகவே பல சர்ச்சைகளோடு தொடங்கி, பல சர்ச்சைகளோடு நடந்தது. ஆனால் முடியும் பொழுது மகத்தான சாதனைகளோடு முடிந்திருக்கிறது!

இன்று இந்தியா இலங்கை அணிகள் பதினாறாவது ஆசியக் கோப்பையின் இறுதி போட்டியில் கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் மோதிக்கொண்ட இறுதிப் போட்டி ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத வகையில் நடந்து முடிந்திருக்கிறது.

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்று பேட்டிங் செய்ய முடிவு எடுத்த இலங்கை அணியை, இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தங்களுடைய அதீத திறமையால் மிரட்டினார்கள்.

இலங்கை அணியின் முதல் ஆறு பேட்மேன்கள் பவர் பிளேட் முடிவதற்குள் தங்களது விக்கெட்டை கொடுத்து பெவிலியன் திரும்பினார்கள். இதில் ஐந்து விக்கெட்டுகளை முகமது சிராஜ் கைப்பற்றி இருந்தார்.

இதற்கு அடுத்து பவர் பிளே முடிந்து மீதம் இருந்த நான்கு விக்கட்டுகளில் ஒரு விக்கெட்டை முகமது சிராஜ் மீண்டும் வீழ்த்தினார். மீதம் இருந்த மூன்று விக்கெட்டுகளையும் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா வீழ்த்தினார்.

- Advertisement -

இலங்கை அணி 15.2 ஓவர்களில் தனது மொத்த பத்து விக்கெட்டுகளையும் இழந்து, பரிதாபமாக 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சர்வதேச மட்டத்தில் இலங்கை அணிக்கு இது இரண்டாவது மிகக் குறைந்த ரன் ஆகும். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 43 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி இருந்தது.

இந்திய அணியில் முகமது சிராஜ் 7 ஓவர்கள், ஒரு மெய்டன், 21 ரன்கள் ஆறு விக்கெட் கைப்பற்றினார். ஹர்திக் பாண்டியா மூன்று விக்கெட், பும்ரா ஒரு விக்கெட் கைப்பற்றினார்கள்.

இதற்கு அடுத்து இந்த எளிய இலக்கை நோக்கி இந்திய கேப்டன் ரோகித் சர்மா களம் இறங்கவில்லை. அவருக்கு பதிலாக சுக்மன் கீழ் உடன் இஷான் கிஷான் களத்திற்கு வந்தார்.

இந்த இருவரும் சேர்ந்து 6.1 ஓவரில் இந்திய அணியை 51 ரன்கள் எடுக்க வைத்து வெற்றி பெற வைத்தனர். மொத்தமாக இந்த போட்டி 21.3 பந்துகள் மட்டுமே நடந்திருக்கிறது.

இந்த மெகா வெற்றியின் மூலம் இந்திய அணி எட்டாவது முறையாக ஆசியக் கோப்பை வென்று அசத்தியிருக்கிறது. ரோகித் சர்மா தனது கேப்டன்ஷியில் இரண்டாவது முறையாக ஆசியக் கோப்பையை கைப்பற்றுகிறார்.