ஒரே நாளில் 20 விக்கெட்.. மாறி மாறி ஆல் அவுட் ஆன பாகிஸ்தான் வெஸ்ட் இண்டீஸ்.. 2வது டெஸ்ட்

0
932
Pakistan

பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே பாகிஸ்தான் முல்தான் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இரண்டு அணிகளுமே ஆல் அவுட் ஆகி இருக்கின்றன.

தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்திருக்கிறது. இதில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி இன்று இரண்டாவது டெஸ்ட் போட்டியில் முல்தான் மைதானத்தில் பாகிஸ்தான் அணியை எதிர்கொண்டது.

- Advertisement -

அசத்திய வெஸ்ட் இண்டீஸ் கடைசி பேட்ஸ்மேன்கள்

இந்த போட்டிக்கு சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டிருந்தது. டாஸ் பண்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்வது என அறிவித்தது. முதலில் பேட்டிங் செய்ய வந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 54 ரன்கள் 8 விக்கெட்டுகளை இழந்து பரிதாப நிலையில் இருந்தது.

இந்த நிலையில் குடகேஷ் மோட்டி 55 ரன்கள், கெமார் ரோச் 25, ஜொமைல் வாரிக்கன் ஆட்டம் இழக்காமல் 36 இடங்கள் எடுக்க, ஓரளவுக்கு தப்பித்த வெஸ்ட் இண்டீஸ் அணி 41.1 ஓவரில் 163 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. பாகிஸ்தான் அணியின் இடது கை சுழல் பந்துவீச்சாளர் நோமன் அலி ஹாட்ரிக் விக்கெட் உடன் 6 விக்கெட் கைப்பற்றினார்.

- Advertisement -

பாகிஸ்தானும் ஆல் அவுட் ஆன பரிதாபம்

இதைத் தொடர்ந்து முதல் நாளில் தனது முதல் இன்னிங்சை விளையாடிய பாகிஸ்தான் அணியும் தடுமாறியது. அந்த அணி 54 ரன்னுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தது. பாபர் அசாம் இந்த இன்னிங்ஸிலும் ஏமாற்றம் அளித்து ஒரு ரன்னில் வெளியேறினார்.

இதையும் படிங்க : 2024 ஐசிசி டி20 அணி.. ரோகித் கேப்டன்.. 4 இந்திய வீரர்களுக்கு இடம்.. ஆப்கான் ஜிம்பாப்வே அசத்தல்

இதைத் தொடர்ந்து ஒரு முனையில் தாக்குப்பிடித்த முகமது ரிஸ்வான் 49 ரன்கள் எடுத்தார். இவருக்கு அடுத்தபடியாக சவுத் சகில் 32 ரன்கள் சேர்த்தார். முடிவில் பாகிஸ்தான் அணி 47 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. மோசமாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசியாக ஒன்பது ரன் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஜொமைல் வாரிக்கன் 4, மற்றும் ரோச் 3 விக்கெட் கைப்பற்றினார்கள். இன்று ஒரே நாளில் 20 விக்கெட் விழுந்து இருக்கிறது. மேலும் இன்று முதல் நாள் போட்டியும் முடித்துக் கொள்ளப்பட்டது!

- Advertisement -