2024 ஐசிசி டி20 அணி.. ரோகித் கேப்டன்.. 4 இந்திய வீரர்களுக்கு இடம்.. ஆப்கான் ஜிம்பாப்வே அசத்தல்

0
226
Rohit

தற்போது 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசி டி20 அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அணிக்கு சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக்கோப்பை தொடரை ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி கைப்பற்றியது. தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஐசிஐசிஐ டி20 அணியில் ரோகித் சர்மா உடன் சேர்த்து மொத்தம் நான்கு இந்திய வீரர்கள் இடம் பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

கேப்டன் மற்றும் தொடக்க ஆட்டக்காரர்கள்

2024 ஐசிசி டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டன் ஆகவும் தொடக்க ஆட்டக்காரராகவும் இடம்பெற்று இருக்கிறார். இவருடன் ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் இன்னொரு தொடக்க ஆட்டக்காரராக வருகிறார். மூன்றாவது இடத்திற்கு இங்கிலாந்தின் பில் சால்ட் மற்றும் நான்காவது இடத்திற்கு ஆச்சரியப்படும் விதமாக பாபர் அசாம் அறிவிக்கப்பட்டிருக்கிறார்.

மேலும் இந்த அணியின் விக்கெட் கீப்பராகவும் ஐந்தாம் இடத்திற்கான பேட்ஸ்மேன் ஆகவும் கரீபியன் நிக்கோலஸ் பூரன் இடம்பெற்று இருக்கிறார். ஆல் ரவுண்டர்களுக்கான ஆறாவது இடத்தில் சுழல் பந்துவீச்சு பேட்டிங் ஆல்ரவுண்டர் ஜிம்பாப்வே சிக்கந்தர் ராஸா மற்றும் வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் இந்தியாவின் ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

- Advertisement -

பவுலிங் யூனிட்டில் இலங்கை வீரர்

இதற்கு அடுத்து எட்டாவது இடத்தில் சுழல் பந்துவீச்சாளர் ஆப்கானின் ரசித் கான், ஒன்பதாவது இடத்தில் இலங்கை அணியின் சுழல் பந்துவீச்சாளர் வனிந்து ஹசரங்கா என இரண்டு பிரதான சுழல் பந்துவீச்சாளர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.

இதைத்தொடர்ந்து வேகப்பந்துவீச்சாளர்களாக இந்தியாவுக்கு நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் மிக முக்கிய பங்காற்றிய பும்ரா மற்றும் அதிக விக்கெட் கைப்பற்றிய அர்ஸ்தீப் சிங் ஆகியோர் இடம் பெற்று இருக்கிறார்கள்.

இதையும் படிங்க : மீண்டும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர்.. பாகிஸ்தான் உள்ளிட்ட 3 அணிகள் பங்கேற்பு.. அட்டவணை விவரம்

2024 ஐசிசி டி20 அணி : ரோஹித் சர்மா, டிராவிஸ் ஹெட், பில் சால்ட், பாபர் ஆசம், நிக்கோலஸ் பூரன் (வி.கீ), சிக்கந்தர் ராஸா, ஹர்திக் பாண்டியா, ரஷித் கான், வனிந்து ஹசரங்கா, ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் அர்ஷ்தீப் சிங்.

- Advertisement -