ஆப்கானிஸ்தான் இந்தியா விளையாடும் டி20 தொடர்.. தேதி இடங்கள் அறிவிப்பு.. அடுத்தடுத்து பரபரப்பாகும் களம்!

0
9599
Afghanistan

இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த ஐம்பது ஓவர் உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி கோப்பையை வெற்றி வாகை சூடியது. இத்தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய வளர்ந்து வரும் ஆசிய அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

- Advertisement -

கடந்த சில வருடங்களாகவே கிரிக்கெட் அரங்கில் பல்துறைகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ஆப்கானிஸ்தான் அணி இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே விளையாடிய ஒன்பது போட்டிகளில் நான்கு போட்டிகளை வென்று அசத்தியது. பலம் வாய்ந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை தவிடு பொடியாக்கியது.

இளமையும் அனுபவமும் கலந்த ஆப்கானிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி வரலாற்றுச் சாதனை படைத்ததோடு மட்டுமல்லாமல் உலக கோப்பை அரை இறுதி ரேசில் நாங்களும் இருக்கிறோம் என்று மேடை போட்டு சொல்லியது. விளையாடிய 9 போட்டிகளில் நான்கு போட்டிகளை வென்று அசத்தியது.

நீண்ட காலமாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இருதரப்பு தொடர்களை நடத்துவதற்கு பல நாடுகளின் கிரிக்கெட் வாரியங்களுடன் நடத்திக் கொண்டிருந்தது. இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் அதற்கு செவி சாய்க்கும் விதமாக இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இது இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது . இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் இடையே சுமுகமான உறவு நீடிப்பதால் ஆப்கானிஸ்தான் ரசிகர்களிடையே இத்தொடர் பெரும் உற்சாகத்தை கொடுக்கும். மேலும் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளை கண்டு களித்த ரசிகர்களுக்கு இந்த டி20 தொடர் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டிக்கு தயாராகும் விதமாக இரு அணி வீரர்களுக்கும் உகந்ததாக இருக்கும்.

மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி 11ஆம் தேதி மொகாலியில் தொடங்குகிறது. தொடர்ந்து இந்தூரில் 14 ஆம் தேதியும் பெங்களூருவில் 17ஆம் தேதியும் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் நடக்க உள்ளன.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான மூன்று டி20 போட்டிகள் கொண்ட டி20 தொடர் வரும் நவம்பர் 23ஆம் தேதி தொடர்ந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.