மும்பைக்கு தரமான சம்பவம்.. தமிழ்நாடு அரையிறுதிக்கு தகுதி.. இந்திரஜித் வருண் சக்கரவர்த்தி அசத்தல்.. விஜய் ஹசாரே 2023!

0
1975
Sai

இந்தியாவில் ஒருநாள் கிரிக்கெட் உள்நாட்டின் மிகப்பெரிய தொடரான விஜய் ஹசாரே டிராபி தற்பொழுது நடைபெற்று வருகிறது.

38 அணிகள் பங்கு பெற்ற இந்தத் தொடரில், எட்டு அணிகள் பங்கு பெறும் கால் இறுதி போட்டிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. இன்று கால் இறுதி சுற்றில் இரண்டாம் கட்ட போட்டிகள் நடைபெற்றன.

- Advertisement -

இதில் ஒரு போட்டியில் குஜராத் ராஜ்கோட் மைதானத்தில் தமிழக அணி வலிமையான மும்பை அணியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங் செய்வது என தீர்மானித்தது.

மும்பை அணிக்கு பேட்டிங்கில் கேப்டன் ரகானே இரண்டு பந்தில் ஒரு ரன் எடுத்து ஏமாற்றம் அளித்தார். பிரசாத் பவார் 59, சிவம் துபே 45, ஜெய் பிஸ்டா 37 ரன்கள் எடுத்தார்கள். 48.3 ஓவரில் மும்பை அனைத்து விக்கெட்களையும் இழந்து 227 ரன்கள் மட்டுமே எடுத்தது.

தமிழக அணியின் தரப்பில் வருண் சக்கரவர்த்தி மற்றும் சாய் கிஷோர் தலா மூன்று விக்கெட்கள், மணிமாறன் சித்தார்த் பாபா அபரஜித் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினார்கள்.

- Advertisement -

இலக்கை நோக்கி விளையாடிய தமிழக அணிக்கு துவக்க ஆட்டக்காரர்கள் பாபா அபரஜித் 45, நாராயணன் ஜெகதீசன் 27, நிதிஷ் ராஜகோபால் 1 எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து பாபா இந்திரஜித் மற்றும் அனுபவ வீரர் விஜய் சங்கர் ஆகியோர் ஜோடி சேர்ந்தார்கள்.

இந்த ஜோடி விக்கெட்டை விடாமல் 43.2 ஓவரில் இலக்கை எட்டி, தமிழக அணியை அரை இறுதிக்குக் கூட்டிச் சென்றது. பாபா இந்திரஜித் ஆட்டம் இழக்காமல் 98 பந்துகளில் 103, விஜய் சங்கர் ஆட்டம் இழக்காமல் 58 பந்துகளில் 51 ரன் எடுத்தார்கள்.

இந்தியாவில் உள்நாட்டு கிரிக்கெட் என்றாலே அதில் பெரிய ஆதிக்கத்தை செலுத்தக்கூடிய அணியாக மும்பை எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது. இந்த முறை வலிமையான மும்பை அணி பலவீனமாக காணப்படுகிறது. நாகலாந்து அணி இடம் அதிர்ச்சி தோல்வி அடைந்திருந்தது. தற்பொழுது தமிழக அணியிடம் தோற்று வெளியேறியிருக்கிறது!