ட்ரீம் ODI லெவனில் தனக்குத்தானே இடம்.. கோலி தோனிக்கு இடமில்லை.. சிரிப்பு காட்டும் பங்களாதேஷ் வீரர் லிட்டன் தாஸ்!

0
920

பங்களாதேஷ் அணி ஆசிய கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்காக முழு வீச்சில் தயாராகி வருகிறது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு ஆசியக் கோப்பை போட்டிகளில் விளையாடுவதற்கான 17 பேர் கொண்ட அணியை பங்களாதேஷ் கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.

கடந்த ஆப்கானிஸ்தான் அணியுடன் ஆன தொடரின் போது பங்களாதேஷ் ஒருநாள் போட்டிக்கான அணியின் கேப்டன் தமிம் இக்பால் கேப்டன் பதவியில் இருந்து விலகியதோடு ஓய்வு பெறுவதாகவும் அறிவித்தார். அதன் பிறகு பங்களாதேஷ் நாட்டின் அதிபர் ஷேக் ஹசீனா கேட்டுக் கொண்டதன் பேரில் ஓய்வு முடிவை திரும்ப பெற்ற அவர் சிறிது காலம் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருக்க முடிவு செய்து இருக்கிறார். இதனால் ஆப்கானிஸ்தான் ஒரு நாள் போட்டி தொடரில் லிட்டன் தாஸ் கேப்டனாக செயல்பட்டு வந்தார்.

- Advertisement -

இந்நிலையில் மிகவும் முக்கியமான தொடர்களான ஆசிய கோப்பை மற்றும் அதனை அடுத்து உலகக்கோப்பை நடைபெற இருப்பதால் பங்களாதேஷ் அணி ஒருநாள் போட்டிகளுக்கு மூத்த வீரரும் ஆல் ரவுண்டருமான ஷகீப் அல் ஹசனை மீண்டும் கேப்டனாக நியமித்திருக்கிறது. இவரது தலைமையில் தான் ஆசிய கோப்பை போட்டிகளில் களம் இறங்குகிறது. மேலும் பங்களாதேஷ் அணியை உலகக் கோப்பையிலும் ஷகீப் அல் ஹசன் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பங்களாதேஷ் அணிக்காக சமீப காலங்களில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருபவர் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் லிட்டன் தாஸ். இவர் 2023 ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார். எனினும் ஒரு போட்டியில் விளையாடிய நிலையில் அயர்லாந்து அணி உடனான தொடரில் பங்கேற்பதற்காக பங்களாதேஷ் நாட்டிற்கு திரும்பச் சென்றார். தற்போது சமீபத்தில் நடந்து முடிந்த க்ளோபல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிவிட்டு தாயகம் திரும்பி இருக்கிறார் லிட்டன் தாஸ் . இந்தப் போட்டியில் இவர் விளையாடிய சர்ரே ஜாகுவார் அணி குளோபல் டி20 இறுதிப் போட்டியில் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரிடம் ஆல் டைம் சிறந்த ஒரு நாள் போட்டிக்கான அணியை தேர்வு செய்யும்படி உள அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டனர் . அதன்படி சிறந்த ஒரு நாள் போட்டிக்கான அணியை தேர்வு செய்தார் லிட்டன் தாஸ். மேலும் அவர் தன்னையே கேப்டனாகவும் தேர்வு செய்தார் . அவரது அணியில் துவக்க வீரர்களாக இலங்கை அணியின் சனத் ஜெயசூர்யா மற்றும் இந்திய அணியின் விரேந்தர் சேவாக் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இந்தியாவின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்று இருக்கிறார். நான்காவது வீரராக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் இடம்பெற்றுள்ளார். ஐந்தாவது இடத்தில் பங்களாதேஷ் அணியின் ஆல் ரவுண்டரும் கேப்டனுமான ஷகீப் அல் ஹசன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.

- Advertisement -

ஆறாவது இடத்தில் லிட்டன் தாஸ் அவரை தேர்வு செய்துள்ளார் மேலும் இந்த அணியின் கேப்டனாகவும் அவரை தேர்வு செய்து இருக்கிறார் . இவர்களைத் தொடர்ந்து இலங்கை அணியின் சமின்தா வாஸ் பாகிஸ்தான் அணியின் வாசிம் அக்ரம் மற்றும் உலகின் அதிவேக பந்துவீச்சாளர் ஆன சோயப் அக்தர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களைத் தொடர்ந்து இரண்டு சுழற் பந்துவீச்சாளர்களாக சுழற்பந்து வீச்சின் ஜாம்பவான்கள் ஆன முத்தையா முரளிதரன் மற்றும் ஷேன் வார்னே ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இவரது அணியில் மாடர்ன் கிரிக்கெட் லெஜெண்டுகளான விராட் கோலி மற்றும் எம்எஸ் தோனி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை. இது இந்திய ரசிகர்களை சிறிது ஏமாற்றம் அடைய செய்திருக்கிறது. லிட்டன் தாஸ் இரண்டு முறை இந்திய அணிக்கு எதிராக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணிக்கு எதிராக மிகச்சிறந்த சதத்தை எடுத்தார். மேலும் கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற டி20 உலக கோப்பையின் போது இந்திய அணிக்கு எதிரான போட்டியில் 27 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரது ஆட்டமிழப்பிற்கு பின்பு தான் இந்திய அணி அந்த போட்டியில் வெற்றி பெற முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

லிட்டன் தாஸ் ட்ரீம் ஓடிஐ XI:
 சனத் ஜெயசூர்யா
வீரேந்திர சேவாக்
சச்சின் டெண்டுல்கர்
ரிக்கி பாண்டிங்
லிட்டன் தாஸ் (கேப்டன்) ஷாகிப் அல் ஹசன்
சமிந்தா வாஸ்
வாசிம் அக்ரம்
சோயப் அக்தர்
முத்தையா முரளிதரன்
ஷேன் வார்னே