இந்திய கிரிக்கெட்டில் புதிய வரலாறு உருவானது.. ரிங்கு சிங் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகிறார்!

0
562
Bumrah

இந்திய ஆண்கள் டி20 கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்டியா தலைமையில் விளையாடி தோற்றது!

இதை அடுத்து மீண்டும் இந்திய ஆண்கள் டி20 கிரிக்கெட் அணி அயர்லாந்துக்கு சென்று மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடருக்கு ஹர்திக் பாண்டியா, சூரியகுமார் யாதவ், சுப்மன் கில், இஷான் கிஷான், குல்தீப் யாதவ், சாகல் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் இந்த அணிக்கு காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜஸ்ப்ரீத் பும்ரா கேப்டனாக அறிவிக்கப்பட்டார். இதன் மூலம் இந்திய டி20 அணிக்கு ஒரு வேகப்பந்துவீச்சாளர் கேப்டனாக அறிமுகமாகும் வரலாற்று சிறப்பை அவர் பெற்றார். மேலும் காயத்தில் இருந்து மீண்டுவந்த பிரசித் கிருஷ்ணாவுக்கும் அணியில் இடம் கிடைத்தது.

மேலும் இந்த அணியில் முதல்முறையாக ரிங்கு சிங் வாய்ப்பைப் பெற்றார். சில ஆண்டுகள் கழித்து சிவம் துபே இந்திய அணிக்கு திரும்ப வந்திருக்கிறார். மேலும் இரண்டாவது தொடராக பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு விக்கெட் கீப்பராக செயல்படும் ஜிதேஷ் சர்மா இடம்பெற்று இருக்கிறார்.

தற்பொழுது அயர்லாந்துக்கு எதிராக இந்திய அணி பங்கேற்கும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி டப்ளின் நகரில் இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான டாசில் வென்ற இந்திய அணியின் கேப்டன் பும்ரா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

- Advertisement -

இந்திய டி20 அணியில் ரிங்கு சிங் முதல் முறையாக அறிமுகம் ஆகிறார். மேலும் பிரசித் கிருஷ்ணாவும் அறிமுகம் ஆகிறார். இந்த முறை இந்த அணியிலும் ஏழு பேட்ஸ்மேன்கள் மட்டுமே இடம்பெறுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எளிய குடும்பப் பின்புலத்தில் இருந்து மிகக் கடுமையாக உழைத்து, ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சிறப்பான முறையில் விளையாடும், தற்பொழுது ரிங்கு சிங் இந்திய அணிக்குள் நுழைந்து இருப்பது அனைவரையும் மகிழ்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. முன்னேற உழைக்கும் இளைஞர்களுக்கு ஒரு தூண்டுகோலாக அவரது வாழ்க்கை இருக்கிறது!

அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணி.

ஜெய்ஸ்வால், ருத்ராஜ், சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அர்ஸ்தீப் சிங், ரவி பிஸ்னோய் பும்ரா மற்றும் பிரசித் கிருஷ்ணா.

இந்தப் போட்டிக்கான டாஸில் இந்திய கேப்டன் பும்ரா பேசும் பொழுது ” திரும்ப வந்ததில் மகிழ்ச்சியாக இருக்கிறது. நீங்கள் இங்கு வரும்பொழுது சிறப்பான கிரிக்கெட்டை எதிர்பார்க்கிறீர்கள். ஒரு வேகப்பந்து வீச்சாளராக விக்கெட் உதவியாக இருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் என்ன நடக்கிறது என்று பார்ப்போம். எங்களிடம் இரண்டு அறிமுக வீரர்கள் ரிங்கு சிங் மற்றும் பிரசித் கிருஷ்ணா இருக்கிறார்கள். அவர்களிடம் விளையாட்டை அனுபவித்து மகிழ்ச்சியாக விளையாடுங்கள் என்று கூறி இருக்கிறேன்!” என்று கூறியிருக்கிறார்!