2023 ஆம் ஆண்டில் இதுவரை ஓய்வு பெற்ற 5 பிரபல கிரிக்கெட் வீரர்கள்

0
634

ஒவ்வொரு விளையாட்டு வீரருக்கும் தங்களது வாழ்க்கையில் ஒரு தொடக்கத்தைப் போலவே முடிவு ஒன்றும் இருக்கும். எல்லா விளையாட்டுகளையும் போலவே கிரிக்கெட்டிலும் ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் வீரர்கள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவார்கள். பொதுவாக ஒரு கிரிக்கெட் வீரரின் சராசரி காலம் 20 முதல் 25 ஆண்டுகள் வரை இருக்கும். சர்வதேச அளவில் 15 முதல் 25 ஆண்டுகள் வரை ஒரு கிரிக்கெட் வீரரால் முழு திறனுடன் கிரிக்கெட் போட்டியை உச்சபட்ச தரத்தில் ஆட முடியும். இந்த 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தற்போது வரை ஆறு சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் ஓய்வு பெற்றிருக்கின்றனர். அவர்கள் அவர்களைப் பற்றி நாம் பார்ப்போம் .

1. ஆரோன் பின்ச்:

ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாக இருந்த ஆரோன்  பின்ச் 2021 ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பையில் ஆஸ்திரேலியா அணி சாம்பியன் பட்டம் வெல்வதற்கு முக்கிய காரணமாக இருந்தவர். 2022 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பை போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது. இதனைத் தொடர்ந்து அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு அறிவித்தார். இவர் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதற்கு காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலியா அணிக்காக 146 ஒரு நாள் போட்டிகளில் ஆடி இருக்கும் பின்ச் 5406 ரண்களை சேர்த்திருக்கிறார். இதில் 17 சதங்களும் 30 அரை சதங்களும் அடங்கும். 103 சர்வதேச டி20 போட்டிகளில் ஆடி இருக்கும் ஆரோன்  பின்ச்:3120 ரன்கள் சேர்த்திருக்கிறார். அதிகபட்ச ஸ்கோர் 172. இது டி20 போட்டிகளில் ஒரு பேட்ஸ்மனால் அடிக்கப்பட்ட அதிகபட்ச ரன் ஆகும்.

- Advertisement -

2.முரளி விஜய்:

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான முரளி விஜய் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இவர் 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தனது சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையை துவக்கியவர். 2017 ஆம் ஆண்டிற்கு பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் ஐபிஎல் தொடர்களிலும் ரஞ்சிப் போட்டிகளிலும் ஆடி வந்தார். தற்போது சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று கிரிக்கெட் சார்ந்த ஓடத்துறைகளில் கவனம் செலுத்தப் போவதாக தெரிவித்திருக்கிறார். இந்திய அணிக்காக 61 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் முரளி விஜய் 3982 ரன்களை எடுத்துள்ளார். இதில் 12 சதங்களும் 15 அரை சதங்களும் அடங்கும். இந்தியா அணிக்காக 17 ஒரு நாள் போட்டிகளில் ஆடி இருக்கும் முரளி விஜய் 339 ரன்களை சேர்த்துள்ளார். இதில் ஒரே ஒரு அரை சதம் மட்டும் அடங்கும்.

3. ஜோகிந்தர் சர்மா:

2007 ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பையின் நாயகனான ஜோகிந்தர் சர்மா 2004 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டி தொடரின் போது இந்திய அணிக்காக அறிமுகமானார். இதுவரை நான்கு ஒரு நாள் போட்டிகளில் இந்திய அணிக்கு ஆடி இருக்கிறார். உலகக் கோப்பையின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணிக்காக ஆடியது தான் இவரது கடைசி சர்வதேச போட்டி . ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காக முதல் மூன்று வருடங்கள் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய அணிக்காக நான்கு ஒருநாள் போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 35 ரன்கள் எடுத்ததோடு ஒரு விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். நான்கு சர்வதேச செட்டி 20 போட்டிகளில் இந்தியாவுக்காக ஆடி இருக்கும் இவர் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

4. ஹாசிம் அம்லா:

தென்னாப்பிரிக்கா அணியின் முன்னணி பேட்ஸ்மேன் மற்றும் முன்னாள் கேப்டன் ஹாசிம்  அம்லா 2019 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். ஆனாலும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ந்து ஆடிவந்த இவர் இந்த வருடம் முதல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தனது ஓய்வை அறிவித்திருக்கிறார். தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற சவுத் ஆப்பிரிக்கா டி20 லீக் கிரிக்கெட்டில் கேப் டவுன் எம் ஐ அணியின் பேட்டிங் பயிற்சியாளராக பணியாற்றினார். தென்னாப்பிரிக்க அணிக்காக 124 டெஸ்ட் போட்டிகளில் ஆடி இருக்கும் அமலா 9282 ரண்களை எடுத்து இருக்கிறார். இதில் 28 சதங்களும் 41 அரை சதங்களும் அடங்கும். 181 ஒரு நாள் போட்டிகளில் ஆடி இருக்கும் ஹாசிம்  அம்லா 8113 ரண்களை சேர்த்துள்ளார். இதில் 27 சதங்களும் 31 அரை சதங்களும் அடங்கும். 44 டி20 போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 1227 ரண்களை சேர்த்திருக்கிறார். இதில் ஆறு அரை சதங்கள் அடங்கும்.

- Advertisement -

5. டேனியல் கிறிஸ்டியன்:

ஆஸ்திரேலியாவின் விக்டோரியாவைச் சார்ந்த அதிரடி வீரரான டேனியல் கிறிஸ்டியன் 2010 ஆம் ஆண்டு மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானார். 2012 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் போட்டியின் மூலம் தனது சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் வாழ்வை தொடங்கியவர். இவர் ஆஸ்திரேலியா அணிக்காக 20 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 273 ரன்களை சேர்த்து இருக்கிறார். மேலும் பந்துவீச்சின் மூலம் 20 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இலங்கை அணிக்கு எதிராக 31 ரன்களுக்கு 5 விக்கெட்களை வீழ்த்தியது இவரது சிறப்பான பந்துவீச்சாகும். ஆஸ்திரேலியா அணிக்கு 23 சர்வதேச t20 போட்டிகளில் ஆடி இருக்கும் இவர் 118 கண்கள் சேர்த்து இருக்கிறார். மேலும் 13 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.