இந்திய அணி முதல் டெஸ்ட்டை வெல்ல முடியுமா.. தோல்வியை தவிர்க்க என்ன செய்யணும்?.. இங்கிலாந்து திடீர் முன்னிலை

0
316
Gill

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் எந்த அணிக்கு தற்போதைக்கு முன்னிலை இருக்கிறது? இந்திய அணி இந்த டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்க்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

இந்தப் போட்டிக்கு டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்து வீச இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி மிக நெருக்கமாக 465 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு பெரிய முன்னிலை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

100 ஓவர்களால் வந்த பிரச்சனை

இந்திய அணி 471 ரன்னை 113 ஓவர்களில் எடுத்தது. ஆனால் இங்கிலாந்து அணி 100 ஓவர்களில் 465 ரன்கள் எடுத்து விட்டது. அந்த அணி சராசரியாக நூறு ஓவர்கள் விளையாடினால் 450 ரன்கள் எடுக்கும் என்பதை இது உறுதியாக காட்டுகிறது. இந்த இடத்தில்தான் இந்திய அணிக்கு பிரச்சனை ஆரம்பிக்கிறது.

தற்போது இந்திய அணி இரண்டு விக்கெட் இழப்புக்கு 90 ரன்கள் எடுத்து இருக்கிறது. இந்திய அணி இன்றைய நாளில் முழுமையாக விளையாடினால் 350 ரன்கள் எடுக்க முடியும். இதன் அடிப்படையில் பார்த்தால் இந்திய அணியால் 440 ரன்கள் இங்கிலாந்து அணிக்கு இலக்காக கொடுக்க முடியும். ஆனால் இதற்கு இந்திய அணி இன்று முழுவதும் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதுதான் முக்கியமானது.

- Advertisement -

இங்கிலாந்திற்கான வாய்ப்பு

ஒருவேளை இந்திய அணி 300 முதல் 350 ரன்கள் கொடுக்கும் என்றால் இங்கிலாந்து அதில் பாதியை இன்று அடிக்க முடியும். எனவே இந்திய அணி போட்டியை டிரா செய்வதற்கான வாய்ப்புகள் கிடையாது. எனவே இப்போதைக்கு இந்திய அணி போட்டியை தோற்கக் கூடாது என்றால் இன்றைய நாள் முழுவதும் பேட்டிங் செய்தாக வேண்டும்.

இதையும் படிங்க: சாய் சுதர்சனுக்கு ஸ்டோக்ஸ் விரித்த மாயவலை.. பரிதாபமாக மாட்டிய சம்பவம் – என்ன நடந்தது?

மேலும் 300 முதல் 350 ரன்கள் வரை இலக்கு கொடுத்து இந்தியா வெல்ல வேண்டும் என்றால் பந்து வீச்சுக்கு சாதகமாக வானம் மேகமூட்டமாக நீண்ட நேரத்திற்கு இருக்க வேண்டும். மிகக் குறிப்பாக இந்திய பீல்டிங் மேம்பட வேண்டும். பும்ராவுக்கு மற்ற பந்துவீச்சாளர்களிடமிருந்து சரியான ஒத்துழைப்பு கிடைக்க வேண்டும். இதுவெல்லாம் நடந்தால் இந்திய அணி குறைந்த இலக்கை வைத்து வெல்வதற்கான வாய்ப்புகள் உண்டு. ஏனென்றால் இந்த மைதானத்தில் நான்காவது இன்னிங்ஸிலும் 350 ரன்கள் தாண்டி எடுக்க முடியும் என்று புள்ளிவிபரம் சொல்கிறது.

- Advertisement -