கே.எல்.ராகுலுக்கு மீண்டும் வாய்ப்பா? – பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பரபரப்பு கருத்து!

0
1059
Rahul Dravid

இந்திய கிரிக்கெட்டில் எல்லா திறமைகள் இருந்தும், திறமையை நிரூபிக்க அதிகபட்ச வாய்ப்புகளைப் பெற்றும், சீராக தடுமாறிக் கொண்டே இருக்கும் ஒரு வீரர் யார் என்றால் அது இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் கே.எல்.ராகுல்தான்!

தனது மிகச் சிறப்பான பேட்டிங் தொழில்நுட்பம் மூலம் கீழ் மட்டத்தில் அனைவரது கவனத்தையும் கவர்ந்து இந்திய அணிக்குள் நுழைந்த கே.எல்.ராகுல், மிக இளம் வயதிலேயே இந்திய அணிக்காக சர்வதேச போட்டிகளில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் சதம் அடித்து சாதனை புரிந்தார்!

- Advertisement -

2018 ஆம் ஆண்டு இங்கிலாந்து டெஸ்ட் தொடர் விளையாடச் சென்ற இந்திய அணியில் இடம் பெற்ற அவர் அங்கு தொடர்ந்து சொதப்பியதால் அதற்கு அடுத்து இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பை கெடுத்துக் கொண்டார்!

கே.எல்.ராகுலுக்கு காயம் என்பது ஒரு மிகப்பெரிய பின்னடைவாக அவரது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் அமைந்தது. இது மட்டுமல்லாமல் தற்போது சமீபத்தில் குடலிறக்க அறுவை சிகிச்சை செய்து கடந்த வருட ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்திய அணியில் இடத்தை இழந்திருந்தார்.

சில ஆண்டுகளாகவே அவரது பேட்டிங் ஃபார்ம் என்பது நம்பிக்கையான இடத்தில் இல்லை. மூன்று வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் தொடர்ந்து சறுக்கினார். சில போட்டிகளில் அபாரமாய் விளையாடுவதும் அதன் மூலம் வாய்ப்பை பெற்று பிறகு சொதப்புவதுமே தொடர்கதையாக இருக்கிறது. மேலும் உலகக் கோப்பை போன்ற முக்கியமான ஆட்டங்களில் அவர் பேட்டிங்கில் காட்டும் எச்சரிக்கை என்பது மொத்த இந்திய அணியும் தடுமாற வைக்கிறது. இப்படியான நிலையில் தற்பொழுது அவரது மோசமான பாதுகாப்பு உணர்வு பார்டர் கவாஸ்கர் டிராபியிலும் அவரை சிறப்பாக செயல்பட விடவில்லை.

- Advertisement -

இந்த நிலையில் நடந்து முடிந்த ஆட்டம் குறித்து பேசி உள்ள இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்
” கேப்டன் ரோஹித் சர்மா புத்திசாலித்தனமாக இருந்ததாக நான் நினைக்கிறேன். அவருக்கு ட்ரெஸ்ஸிங் ரூம் மேல் மரியாதை உண்டு. நீண்ட காலமாக இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் இருக்கும் வீரர் அவர். அவர் அதிகம் பேச மாட்டார். ஆனால் அவர் பேசும் பொழுது அதை அனைவரும் கவனிப்பார்கள். ட்ரெஸ்ஸிங் ரூம் மற்றும் வீரர்கள் மீது அவர் அதிக அளவு அக்கறை வைத்துள்ளார். விராட் கோலி போன்ற திறமையான ஒருவரிடம் இருந்து ரோஹித் சர்மா கேப்டன்சியை ஏற்றதற்கு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள்!” என்று கூறியிருக்கிறார்!

மேலும் தொடர்ந்து பேசிய அவர்
” இந்த டெஸ்ட் போட்டி மேலும் கீழும்தான் சென்றது. அக்சர் மற்றும் அஸ்வின் இருவரது பார்ட்னர்ஷிப்தான் போட்டியை மாற்றியது என்று நான் நினைக்கிறேன். நாங்கள் 200 முதல் 225 ரன்கள் துரத்த வேண்டும் என்று நினைத்து இருந்தோம். ஆனால் அவர்களது பார்ட்னர்ஷிப் நாங்கள் திரும்பி வர உதவியது. நேற்று மாலை நாங்கள் கொஞ்சம் ரண்களை நிறைய தந்து விட்டோம். ஆனால் இன்று காலை அதை சிறப்பாக சரி செய்தோம். அப்போது ஆட்டம் நகர்ந்த விதம் மிகவும் அற்புதமாக இருந்தது” என்று கூறியுள்ளார்!

கே.எல்.ராகுல் பற்றி பேசிய அவர்
“அவருக்கு நாங்கள் எப்பொழுதும் எல்லா வழிகளிலும் ஆதரவாக இருப்போம். இப்படியான ஒரு நிலை யாருக்கு வேண்டுமானாலும் கிரிக்கெட்டில் வரலாம். அவர் இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற அணிகளை எதிர்த்து அவர்களது நாட்டிலேயே சதம் அடித்த வீரர்!” என்று கூறியிருக்கிறார்!