உலக கிரிக்கெட்

வரலாற்று டி20 தொடர்.. ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஸ்காட்லாந்து அணி அறிவிப்பு.. கோச் உற்சாகம்

2024 டி20 உலகக்கோப்பை தொடர் முடிவுக்குப் பிறகு ஆஸ்திரேலியா ஆண்கள் கிரிக்கெட் அணி அடுத்த மாதத்தில் ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுகிறது. தற்போது இதற்கான ஸ்காட்லாந்து அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலியா அணி முதலில் இங்கிலாந்து செல்லும் முன் ஸ்காட்லாந்து சென்று செப்டம்பர் 4 முதல் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கு அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக செப்டம்பர் 11ம் தேதி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், செப்டம்பர் 19ஆம் தேதி முதல் செப்டம்பர் 29ஆம் தேதி வரையில் 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே இதுவரையிலான இருநாட்டு சர்வதேச டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது கிடையாது. வரலாற்றில் முதல் முறையாக இரு நாடுகளுக்கும் இடையே மூன்று போட்டியில் கொண்ட டி20 தொடர் நடைமுறை இருக்கிறது.

இதுவரையில் இந்த இரண்டு அணிகளும் சர்வதேச டி20 போட்டியில் ஒரே ஒருமுறை இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடரில் மோதிக்கொண்டன. இதில் சிறப்பாக விளையாடிய ஸ்காட்லாந்து 180 ரன்கள் எடுத்தது. பின்பு பரபரப்பான போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த தொடர் குறித்து ஸ்காட்லாந்து பயிற்சியாளர் வாட்சன் பேசும் பொழுது “நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். உலகின் சிறந்த அணிக்கு எதிராக விளையாட ஒரு அருமையான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதைவிட வேறு எந்த ஊக்கமும் இந்த தொடருக்கு எங்கள் வீரர்களுக்கு தேவையில்லை. உலகின் சிறந்த வீரர்களுக்கு எதிராக அவர்கள் போட்டியிட விரும்புகிறார்கள். மேலும் போட்டியில் வெற்றி பெறவும் விரும்புகிறார்கள்.

பெரிய கூட்டத்திற்கு எதிராக விளையாடுவது மிகவும் சிறப்பான ஒன்றாக எங்கள் வீரர்களுக்கு அமையும். வெற்றி பெறுவதுதான் எங்களுடைய முக்கியமான இலக்கு. நாங்கள் இந்தத் தொடரை வெல்ல முடிந்தால் எங்கள் அணி அணி ஊழியர்கள் மற்றும் தேசத்திற்கு அந்த வாரம் மிக சிறப்பானதாக அமையும்” என்று கூறியிருக்கிறார்.

இதையும் படிங்க : மரியாதை முக்கியம்.. கோலி ரோகித் துலீப் டிராபியில் ஆடாத காரணம் இதுதான்.. ஆஸி இங்கிலாந்தை பாருங்க – ஜெய் ஷா பேட்டி

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான ஸ்காட்லாந்து அணி :

ரிச்சி பெரிங்டன் (கே), சார்லி கேசல், மேத்யூ கிராஸ், பிராட்லி க்யூரி, ஜாஸ்பர் டேவிட்சன், கிறிஸ் க்ரீவ்ஸ், ஆயில் ஹேர்ஸ், ஜாக் ஜார்விஸ், மைக்கேல் ஜோன்ஸ், மைக்கேல் லீஸ்க், பிராண்டன் மெக்முல்லன், சாஃப் சோர்யன்ஸ்லே, சாஃப் சோர்யன்ஸ்லே , சார்லி டியர், மார்க் வாட் மற்றும் பிராட்லி வீல்.

- Advertisement -
Published by
Tags: AUS vs SCO

Recent Posts