இன்று ரஞ்சி டிராபியில் அறிமுகமாகும் 12வயது சிறுவன்.. யார் இந்த வைபவ்?

0
524
Ranji

உலக கிரிக்கெட் நாடுகளில் யாருக்கும் இல்லாத உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு இந்தியாவுக்கு இருக்கிறது. இந்த உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்புதான் இந்தியாவுக்கு நிறைய திறமையான வீரர்களைத் தொடர்ச்சியாக கொடுத்துக் கொண்டிருக்கிறது.

இதில் இந்தியாவின் உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிரிக்கெட் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்தியாவிற்கு விளையாட வந்த அனைத்து வீரர்களும் இங்கிருந்துதான் சில காலம் முன்பிருந்து வந்திருக்கிறார்கள்.

- Advertisement -

ஐபிஎல் தொடரின் வருகைக்குப் பிறகு ரஞ்சி தொடரின் முக்கியத்துவம் கொஞ்சம் குறைந்து இருப்பதாக இந்திய முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டுவது தற்பொழுது நடைபெற்று வருகிறது. ஆனாலும் கூட ரஞ்சி கிரிக்கெட்டுக்கான முக்கியத்துவம் இன்னும் இந்தியாவில் குறையவில்லை.

இன்று இந்த வருடத்துக்கான ரஞ்சி டிராபி சீசன் போட்டிகள் துவங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் இன்று 16 போட்டிகள் நடைபெறுகிறது. 38 அணிகள் பங்கு பெறும், இந்தத் தொடரில் ஏழு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு இருக்கின்றன.

இதில் மும்பை பீகார் அணிகள் இடம்பெற்றுள்ள பிரிவில் இரு அணிகளும் மோதிக் கொள்ளும் போட்டி தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்தான் பீகார் மாநில அணிக்காக 12 ஆண்டு 284 நாட்கள் வயதான வைபவ் சூரிய வன்சி என்கின்ற இளம் பேட்ஸ்மேன் அறிமுகம் ஆகியிருக்கிறார். இதன்மூலம் குறைந்த வயதில் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகமான நான்காவது இளம் வீரராக மாறியிருக்கிறார்.

- Advertisement -

இவருக்கு முன்பாக 1942 மற்றும் 43 ஆம் வருடம் ரஞ்சி தொடரில் ராஜபுதன அணிக்காக 12 ஆண்டு 73 நாட்கள் வயதான அலிமுதின் என்பவர் மிக இளம் வயதில் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் அறிமுகமான வீரர் என்கின்ற சாதனைக்கு சொந்தக்காரராக இருக்கிறார்.

இவருக்கு அடுத்தபடியாக 1959 மற்றும் 60 ரஞ்சி தொடரில் எஸ்கே போஸ் 12 ஆண்டு மற்றும் 76 நாட்கள், 1937-இல் 12 வயது மற்றும் 247 நாட்களில் முகமது ரம்ஜான் என்பவரும் அறிமுகமாகி இருக்கிறார்கள்.

இவர்களுக்கு அடுத்தபடியாக தற்போது பிகாரின் வைபவ் சூரியவன்சி இன்று மும்பைக்கு எதிரான போட்டியில் பீகார் அணிக்காக அறிமுகமாக இருக்கிறார். தற்பொழுது பீகார் அணி மும்பைக்கு எதிராக பந்து வீசி வருகிறது. இந்த இளம் சிறுவன் நான்காவது இடத்தில் பேட்டிங் செய்யக் கூடியவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது!