எனக்கும் கேப்டன்சி பண்ண தெரியும்.. ரோகித்தை வைத்தே நிரூபித்த கில்.. தரமான சம்பவம்.. ரசிகர்கள் மகிழ்ச்சி

0
162
Rohit

இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் ஆன்ஃபீல்டு கேப்டன்சி சிறப்பாக இருந்து வருகிறது.

இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் ஏற்கனவே இரண்டு போட்டிகளை தோற்று தொடரை இழந்துவிட்டது. இந்த சிட்னி மைதானத்தில் நடைபெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

- Advertisement -

சிறப்பாக பந்து வீசும் இந்தியா

இதைத்தொடர்ந்து முதலில் விளையாட வந்த ஆஸ்திரேலியா அணிக்கு மிச்சல் மார்ச் 41 ரன், டிராவிஸ் ஹெட் 29 ரன் எடுத்து நல்ல துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். இதற்கு அடுத்து மேத்யூ ஷார்ட் 30 ரன், ரென்ஷா 56, அலெக்ஸ் கேரி 24 ரன் என நல்ல பங்களிப்பை அடுத்தடுத்து கொடுக்க ஆஸ்திரேலியா அணி 280 ரன்கள் தாண்டலாம் என்று எதிர்பார்ப்பு உருவாகியது.

இந்த நிலையில் இந்திய பந்துவீச்சாளர்கள் உள்ளே வந்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை கைப்பற்ற ஆஸ்திரேலியா அணியின் பக்கம் நெருக்கடி அதிகரித்தது. மேலும் இந்திய கேப்டன் கில் சிறப்பான பந்துவீச்சு மாற்றங்களையும், ஃபீல்ட் செட்டப்பையும் மாற்றி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

- Advertisement -

கில் செய்த சம்பவம்

இந்த நிலையில் கடந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய மிட்சல் ஓவன் உள்ளே வர ஹர்ஷித் ராணாவை கில் கொண்டு வந்தார். 30 ஓவர்கள் தாண்டி இருந்தாலும் உடனடியாக ரோகித் சர்மாவை ஸ்லிப்பில் கில் நிற்க வைத்தார். இதற்கு உடனடி பலராக மிட்சல் ஓவன் விக்கெட் ரோகித் சர்மா கையில் விழுந்தது.

இதையும் படிங்க : கில் இங்க வா நில்லு நான் சொல்றத கேளு.. உடனே விக்கெட் எடுத்து கொடுத்த விராட்.. களத்தில் செம சம்பவம்

இதற்கு அடுத்து மிச்சல் ஸ்டார்க் உள்ளே வர குல்தீப் யாதவை உடனடியாக கில் கொண்டு வந்தார். உடனடியாக அவரை குல்தீப் யாதவ் கிளீன் போல்ட் செய்து வெளியேற்றினார். தற்போது ஆஸ்திரேலியா அணி ஏழு விக்கெட் இழப்புக்கு 40 ஓவர்களில் 206 ரன்கள் எடுத்து இருக்கிறது.

- Advertisement -