நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இரண்டாவது சுற்றில் விளையாடி வரும் நான்கு அணிகளுக்கும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு எப்படி இருக்கிறது? என்பது குறித்து பார்க்கலாம்.
இந்த இரண்டாவது சுற்றில் இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் தங்களது முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணியை வென்று இருக்கின்றன. பாகிஸ்தான் அணி தனது முதல் போட்டியை தோற்று இரண்டாவது போட்டியில் இலங்கையை வென்று இருக்கிறது. இலங்கை அணி தான் விளையாடிய இரண்டு போட்டிகளையும் தோற்று இருக்கிறது.
நான்கு அணிகளுக்கும் வாய்ப்பு
தற்போது இலங்கை அணி மூன்றில் இரண்டு போட்டிகளை தோற்று விட்டாலும் கூட அந்த அணிக்கு எப்பொழுதும் இறுதிப் போட்டிக்கான வாய்ப்பு இருப்பது சுவாரசியத்தை அதிகப்படுத்துகிறது. இதற்காக இலங்கை அணி பங்களாதேஷை நம்பி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
பங்களாதேஷ் அணி தனக்கிருக்கும் மீதி இரண்டு போட்டிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளை வெல்ல வேண்டும், இலங்கை அணி தனது கடைசி போட்டியில் இந்திய அணியை நல்ல ரன் ரேட்டில் வீழ்த்த வேண்டும். இப்படி நடக்கும் பொழுது பங்களாதேஷ் மூன்று வெற்றிகள் உடனும் இலங்கை அணி ஒரு வெற்றி உடன் ரன் ரேட் அடிப்படையிலும் இறுதிப் போட்டிக்கு பெறும்.
இந்தியாவுக்கான வாய்ப்பு
இந்திய அணி இன்று பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெறும் போட்டியில் வென்றால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று விடும். அடுத்து இலங்கை அணி ஆசியக் கோப்பை தொடரிலிருந்து வெளியேறிவிடும். இதைத்தொடர்ந்து பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டியில் யார் வெல்கிறார்களோ அவர்கள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவார்கள்.
இதையும் படிங்க : சஞ்சு சாம்சன் தடுமாறுவது உண்மைதான்.. இந்த 2 வீரர்களுக்கு வாய்ப்பு தரவே மாட்டோம் – இந்திய துணைப் பயிற்சியாளர் பேட்டி
ஒருவேளை இந்திய அணி பங்களாதேஷ் அணிக்கு எதிராக தோற்று இலங்கை அணியை வென்றால், பாகிஸ்தான்ல அணி தனது கடைசி போட்டியில் பங்களாதேஷ் அணியை வென்றால், இந்த மூன்று அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வென்று நான்கு புள்ளிகள் உடன் இருக்கும். இப்படி வரும் பொழுது ரன் ரேட் அடிப்படையில் எந்த இரண்டு அணி முன்னணியில் இருக்கிறதோ அந்த அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும்.






