இன்று ஆசியக் கோப்பை இரண்டாவது சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக இந்திய அணியின் துணை பயிற்சியாளர் ரியான் டென் டஸ்கேட் சஞ்சு சாம்சன் பேட்டிங்கில் சிரமப்பட்டு வருவதாக வெளிப்படையாக ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
தற்போது சஞ்சு சாம்சன் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் விளையாடுகிறார். அவர் முதல் மூன்று இடத்தில் வழக்கமாக விளையாடக்கூடிய வீரர். அவருக்கு ஓமான் அணிக்கு எதிராக மூன்றாவது இடத்தில் வாய்ப்பு கொடுக்கப்பட்ட போது அரை சதம் அடித்தார். ஆனாலும் அவருடைய பேட்டிங் சரளமாக இல்லை. அவருடைய தடுமாற்றம் வெளிப்படையாகவே தெரிகிறது.
சஞ்சு சாம்சன் தடுமாற்றம் உண்மை
இதுகுறித்து பேசி உள்ள ரியான் டென் டஸ்கேட் “சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங் செய்ய இரண்டு நல்ல வாய்ப்புகள் கிடைத்ததாக நான் நினைக்கிறேன். அவர் பேட்டிங் வரிசையில் ஐந்தாவது இடத்தில் எப்படி பேட்டிங் செய்வது என இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார் என்று தோன்றுகிறது. அதே சமயத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பேட்டிங் செய்தபோது ஆடுகளம் சோர்வடைந்து விட்டதாக நினைக்கிறேன்”
“எங்கள் அணியில் துவக்க ஆட்டக்காரர்கள் விளையாடும் விதம், மற்றும் மூன்றாவது நான்காவது இடத்தில் கேப்டன் சூரியகுமார் மற்றும் திலக் வர்மா ஆகியோர் விளையாடும் விதத்தை வைத்து, நாங்கள் ஐந்தாவது இடத்திற்கு தான் ஆள் தேடுகிறோம். இதற்கு சஞ்சு சாம்சன் சரியாக வருவார் என்று நாங்கள் நம்புகிறோம். எதிர்காலத்தில் அந்த இடத்தில் எப்படி சிறப்பாக செயல்படுவது என அவர் கண்டுபிடிப்பார் என்று நம்புகிறேன்”
இந்த வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை
“நாங்கள் அபுதாபியில் சில வீரர்களுக்கு ஓய்வு கொடுக்க முயற்சித்தோம். அதனால் சில வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்தோம். ஆனால் ஆசியக் கோப்பையில் தொடர்ந்து சிறப்பாக செல்வதற்கு வேலைகளை செய்து வருகிறோம். எனவே ரிங்கு சிங் மற்றும் ஜிதேஷ் சர்மா இருவருக்கும் வாய்ப்புகள் கொடுக்கவில்லை. அவர்கள் இருவரும் பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்”
இதையும் படிங்க : நான் போறேன்.. முடிவுக்கு வரும் ஸ்ரேயாஸ் டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை.. சோகமான பின்னணி காரணம் – என்ன நடந்தது?
“இந்த இரண்டு வீரர்களுக்கும் நாம் இப்போது வாய்ப்பு தர முடியாது. இந்த வீரர்களுக்கு இரு நாடுகளுக்கு இடையேயான தொடரில்தான் வாய்ப்பு தருவது சரியாக இருக்கும். ஏனென்றால் தற்போதைய இரண்டாவது சுற்றில் இரண்டு வெற்றிகள் கூட நாம் இறுதிப் போட்டிக்கு செல்வதை உறுதி செய்து விடாது. எனவே நாங்கள் கால்களை ஆக்சிலேட்டரில் இருந்து எடுக்க முடியாது” என்று கூறி இருக்கிறார்.






