டி20 WC.. ஆல் டைம் இந்திய பிளேயிங் XI.. கம்பீரை சேர்க்காத தினேஷ் கார்த்திக்.. ஆச்சரிய அணி

0
34
Gambhir

இந்திய அணியின் முன்னாள் வீரரும் தற்போது ஆர்சிபி அணியின் பயிற்சியாளருமாக இருந்து வரும் தினேஷ் கார்த்திக் எல்லா காலத்திலும் சிறந்த டி20 உலக கோப்பை இந்திய பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இந்திய அணி மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலகக் கோப்பை, ரோகித் சர்மா தலைமையில் 2014 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை என இரண்டு முறை டி20 வடிவத்தில் உலகக் கோப்பையை வென்று இருக்கிறது. இந்த இரண்டு உலகக் கோப்பைகளில் பங்கேற்ற வீரர்களை வைத்து தினேஷ் கார்த்திக் சிறந்த இந்திய பிளேயிங் லெவனை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

- Advertisement -

கம்பீருக்கு இடமில்லை

மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007 ஆம் ஆண்டு முதல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக இருந்த வீரேந்திர சேவாக் மற்றும் கம்பீர் இருவரையும் தினேஷ் கார்த்திக் தேர்வு செய்யவில்லை. இதற்கு பதிலாக 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியை தேர்வு செய்திருக்கிறார்.

இதற்கு அடுத்து மூன்றாவது இடத்தில் மிடில் வரிசையில் அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்து விளையாடும் சூரியகுமார் யாதவ், மற்றும் முதல் டி20 உலக கோப்பை வெற்றியின் கதாநாயகன் யுவராஜ் சிங், அந்த உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஆகியோரை அடுத்தடுத்த மூன்று இடங்களில் வைத்திருக்கிறார்.

- Advertisement -

பழைய வீரர்களுக்கு இடமில்லை

இதற்கு அடுத்து ஆறு இடங்களுக்கு 2024 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற அணியில் இருந்து ஐந்து பேரை தேர்வு செய்து இருக்கிறார். ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அர்ஸ்தீப் சிங், பும்ரா மற்றும் குல்தீப் யாதவ். பழைய அணியில் இருந்து ஒரு வீரராக ஹர்பஜன் சிங்கை தேர்ந்தெடுத்திருக்கிறார்.

இதையும் படிங்க : கைகுலுக்கறது கட்டி பிடிக்கிறது எங்க விருப்பம்.. பாகிஸ்தான் போய் ஒழுங்கா ஆட கத்துக்கோங்க – கபில் தேவ் விமர்சனம்

தினேஷ் கார்த்திக் லெவன்: ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், எம்எஸ் தோனி (கே), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், மற்றும் ஜஸ்பிரித் பும்ரா.

- Advertisement -