பாகிஸ்தான் அணி மற்றும் நிர்வாகம் தேவையற்ற ஸ்டேட்மெண்டுகளை தந்து கொண்டிருப்பதை விட்டு விளையாட்டில் கவனம் செலுத்துவது தான் சரியானது என கபில்தேவ் விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்காதது இன்று வரையில் பெரிய சர்ச்சையாக தொடர்ந்து மாறிக்கொண்டே வருகிறது. பாகிஸ்தான் தரப்பில் இருந்து கருத்துக்கள் மிகவும் சூடாக வருகிறது. பாகிஸ்தான் முன்னாள் வீரர் சூரியகுமார் யாதவை மறைமுகமாக பன்றி என பேசும் அளவுக்கு நிலைமை மோசம் அடைந்திருக்கிறது.
பிடிவாதம் பிடிக்கும் பாகிஸ்தான்
தங்கள் வீரர்களுடன் கை கொடுக்காத இந்திய அணியை தண்டிக்க ஐசிசி இடம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புகார் வந்தது. ஆனால் கிரிக்கெட் விதிகளில் கட்டாயம் கைகுலுக்க வேண்டும் என்று எதுவும் இல்லாததால் ஐசிசி இந்திய அணியை தண்டிக்க மறுத்துவிட்டது.
இதை தொடர்ந்து இந்திய அணிக்கு மறைமுகமாக உதவியாக இருந்ததாக போட்டி நடுவரை தொடரில் இருந்து நீக்க இரண்டு முறை புகார் தந்தது. இந்த இரண்டு முறையும் பாகிஸ்தான் புகாரை ஐசிசி தூக்கி எறிந்து விட்டது. இதைத் தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட நடுவரை இந்திய அணி தொடர்ந்து மேட்ச் பிக்சிங் செய்வதற்காக பயன்படுத்துகிறது என ரமீஷ் ராஜா குற்றச்சாட்டை வைத்தார்.
ஆட்டத்தில் கவனம் செலுத்துங்கள்
இதுகுறித்து கபில்தேவ் பேசும் பொழுது “எல்லாவிதமான பிரச்சனைகளும் இருக்கத்தான் செய்யும். நாம் விளையாட்டில் கவனம் செலுத்த வேண்டும். ஒருவர் கைகுலுக்க வரவில்லை என்றால் அதை பெரிய பிரச்சினையாக தேவையில்லை. அதற்காக தவறான முறையில் பேசிக் கொண்டிருக்கக் கூடாது. பாகிஸ்தான் வீரர்கள் தவறான முறையில் பேசுகிறார்கள். பாகிஸ்தான் நல்ல கிரிக்கெட்டை விளையாட முயற்சி செய்ய வேண்டும். கைகுலுக்குவதும் கட்டிப்பிடிப்பதும் தனிநபர் விருப்பம்”
இதையும் படிங்க : இந்திய டெஸ்ட் அணிக்கு திரும்பும் எண்ணமே இல்லையா? ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராகவும் ஸ்ரேயாஸ் தடுமாற்றம்.. விவரம்
“இந்திய அணி கடந்த 20 ஆண்டுகளாக நல்ல கிரிக்கெட்டை விளையாடி வருகிறது. நமது அணி மிகச் சிறப்பான முறையில் ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் ஐசிசி தொடர்களில் நல்ல முறையில் சிறப்பாக விளையாடுகிறது. இந்த முறை ஆசியக் கோப்பையை இந்திய அணி வெல்லும்” என்று கூறியிருக்கிறார்.






