ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணி தனது பிளேயிங் XI-ல் அர்ஷ்தீப் சிங்கிற்கு பதிலாக ஷிவம் துபேயை தேர்வு செய்தது சரியான முடிவு தான் என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்துள்ளார். பயிற்சியாளராக கவுதம் கம்பீர் ஆக்ரோஷமான கிரிக்கெட் பாணிக்கு தேவையான பேட்டிங் வரிசையை தேர்வு செய்து வருகிறார்.
அதன் ஒரு பகுதியாக ஆசிய கோப்பையில் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான இந்தியாவின் முதல் போட்டியில், ஜஸ்ப்ரீத் பும்ரா மட்டுமே ஒரே ஸ்பெசலிஸ்ட் வேகப்பந்து வீச்சாளராக வைத்திருப்பது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியது. ஹர்திக் பாண்டியா மற்றும் ஷிவம் துபே ஆகியோர் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர்களாக இருந்தனர்.
தினேஷ் கார்த்திக் பாராட்டு:
இதன் மூலம் இந்தியாவின் பேட்டிங் பலமாக விளங்குகிறது. கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் 5வது இடத்தில் பேட்டிங் செய்த அக்ஸர் படேல் போன்றவர் இப்போது 8வது இடத்தில் பேட்டிங் செய்ய வாய்ப்புள்ளது. இது குறித்து பேசிய தினேஷ் கார்த்திக், “நான் யாரைச் சேர்த்தாலும், இந்த அணி செய்யக்கூடியவற்றில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போவதில்லை.”
“உதாரணமாக, ஷிவம் துபேக்கு பதிலாக அர்ஷ்தீப் சிங்கை சேர்த்தால், ஆம், அவர் பந்துவீச்சில் சற்று அதிகம் தருவார். ஆனால் அந்த சிறிய பங்களிப்பு, ஷிவம் துபே பேட்டிங்கில் தரும் மதிப்புக்கு ஈடாகாது. இது ஷிவம் துபே ஒருவரை மட்டும் பற்றியது அல்ல. கூடுதல் பேட்ஸ்மேன் இருப்பதால் அணி என்ன செய்ய முடியும் என்பதுதான் முக்கியம். எனவே, முழு பேட்டிங் அணுகுமுறையும் மாறுகிறது,” என்று கார்த்திக் கூறினார்.
வலுவான அணியாக உள்ளது:
கவுதம் கம்பீர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு, இந்திய அணி விளையாடிய 16 டி20 போட்டிகளில் 14-ஐ வென்றுள்ளது. “இந்திய அணி இப்போது விளையாடும் விதம், கடினமான போட்டிகளில் எந்த சூழ்நிலையிலும் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் அபாயத்திலிருந்து மீள செய்யும்.. உங்களுக்கு கூடுதல் பேட்ஸ்மேன் தேவை. உலகக் கோப்பைக்கு முன் இந்தியா ஒரு வலுவான அணியாக உள்ளது.
இதையும் படிங்க: 2025 ஆசிய கோப்பை.. ஆட்டத்தையே மாற்றக் கூடிய 8 ஓவர்கள்..பாகிஸ்தானில் 2 பேட்டர்ஸ் விக்கெட் தான்.. ஆகாஷ் சோப்ரா கருத்து
ஏனெனில் அவர்கள் என்ன செய்ய விரும்புகிறார்கள் என்பது அவர்களுக்கு தெளிவாகத் தெரியும். பேட் மற்றும் பந்துடன் அவர்களுக்கு தெளிவான திட்டம் உள்ளது. அதை அவர்கள் கடைப்பிடிக்கிறார்கள். இது உலகக் கோப்பைக்கு ஆறு மாதங்களுக்கு முன்பு எப்போதும் நல்ல அறிகுறியாகும்,” என்று தினேஷ் கார்த்திக் தெரிவித்தார்.






