நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் அர்ஸ்தீப் சிங் விளையாட கம்பீர் வாய்ப்பு கொடுக்காதது குறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் மிகவும் காட்டமான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.
தற்போது தொடர் நடைபெற்று வரும் யுஏஇ கண்டிஷனுக்கு சுழல் பந்துவீச்சாளர்கள் சரியாக இருப்பார்கள் என இந்திய பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டன் சூரியகுமார் யாதவ் இருவரும் அர்ஸ்தீப் சிங்கை வெளியில் வைத்து குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு கொடுத்து விளையாட வைத்திருக்கிறார்கள்.
தவறாக சிந்திக்கிறார்கள்
இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” உங்களின் மூன்றாவது சீமர் சிவம் துபேவா என்று எனக்குத் தெரியாது. இது அவரைப் பற்றியதும் கிடையாது. இது உங்கள் அணியில் இருக்கும் தரமான ஒரு பந்துவீச்சாளரை பற்றியது. டி20 கிரிக்கெட்டில் பேட்டிங் வரிசை ஆழமாக இருக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். மற்ற அணிகள் ரபாடா, ஸ்டார்க், அதில் ரசித் மற்றும் ஜோப்ரா ஆர்ச்சர் போன்ற பந்துவீச்சாளர்களுக்கு பேட்டிங் பயிற்சி அளித்து பயன்படுத்துகிறது”
“அதே சமயத்தில் இந்திய அணியை எடுத்துக் கொள்ளும் பொழுது நிறைய பேட்டிங் செய்யக்கூடியவராகவும் குறைவாக பந்து வீசக்கூடியவராகவும் இருப்பவரை இதற்கு பயன்படுத்துகிறது. நாம் அவர்களைப் பின்பற்றி நாம் பந்துவீச்சாளர்களின் பேட்டிங்கில் வேலை செய்ய வேண்டும். ஆனால் நம்முடைய சிந்தனை தலைகீழாக இருக்கிறது”
முடிவெடுக்க பேட்ஸ்மேன்கள் யார்?
“பவுலர்களின் தலை எழுத்தை பேட்ஸ்மேன்கள் முடிவு செய்கிறார்கள். இவர்கள் தங்கள் வாழ்நாளில் கடைசி வரை ஒரு பந்தை கூட வீசப்போவது கிடையாது. இவர்களால் பந்துவீச்சாளர்களின் மனநிலையை புரிந்து கொள்ள முடியாது. நீங்கள் எட்டாவது இடத்தில் பேட்டிங் பற்றி சிந்திக்கிறீர்கள். ஆனால் அர்ஸ்தீப் தற்போது மிகச்சிறந்த பவுலிங் ஃபார்மில் இருக்கிறார். இந்த சிறந்த வருடங்கள் அவருடைய வாழ்க்கையில் திரும்பி வரப்போவதில்லை”
இதையும் படிங்க : பாகிஸ்தானின் இந்த அணுகுமுறையை வாசிம் அக்ரம் வெறுப்பார்.. இந்தியாவுக்கே இது புதுசுதான் – மஞ்ச்ரேக்கர் பேச்சு
“அர்ஸ்தீப் பேட்டிங் செய்ய முடியாது என்பதற்காக நீங்கள் அவருடைய தலைவிதையை எழுதுகிறீர்கள். நான் பந்து வீச்சு கம்யூனிட்டிக்கு ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நமக்கு என்று பெருமைகள் எதுவும் இல்லையென்றால் இங்கு யாரும் நம்மை மதிக்க மாட்டார்கள். நம்மை வெளியே இவர்கள் உட்கார வைத்தால் நாம் அதற்கு கோபப்பட வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.






