சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இருந்து விராட் கோலி, ரோகித் சர்மா அடுத்தடுத்து ஓய்வு பெற்றிருக்கிறார்கள். இதனால் இந்தியாவிற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், இங்கிலாந்து மண்ணில் அது பெரும் பின்னடைவை ஏற்படுத்துவிடும் என்று பல கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சூழலில் டெஸ்ட் கிரிக்கெட் பற்றி பேசும்போது விராட் கோலி உடன் ரோகித் சர்மாவை ஒப்பிட வேண்டாம் என்றும் விராட் கோலி வேற லெவலில் இருக்கின்றார் என்றும் சஞ்சய் மஞ்சுரேக்கர் பேசியிருப்பது சர்ச்சை ஏற்படுத்திருக்கிறது. சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ரோகித் சர்மா 67 போட்டிகளில் விளையாடி 4301 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 12 சதம் அடங்கும்.
கோலி vs ரோகித்:
ஆனால் விராட் கோலி 123 டெஸ்ட் போட்டியில் விளையாடி 9230 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் 30 சதம் அடங்கும். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், “இந்திய அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கில்,அண்மையில் பேசும் போது ரோகித் சர்மாவும் விராட் கோலியும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இல்லாதது வெற்று இடத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறியிருக்கின்றார்.”
“அவருடைய இந்த கருத்து எனக்கு சரி என்று தோன்றவில்லை. அவர் சொன்ன விஷயத்தில் எனக்கு முரண்பாடு இருக்கின்றது. விராட் கோலி பற்றி பேசும்போது, ரோகித் சர்மாவை பற்றியும் அனைவரும் இணைந்து பேசுகிறார்கள். இதை ரசிகர்கள் “ரோகோ” என்ற வார்த்தை எல்லாம் பயன்படுத்தி பேசுகிறார்கள்.”
கோலி வெற லெவல்:
“ஆனால் அது எல்லாம் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் சேரும். வெள்ளை நிற கிரிக்கெட் பந்தில் இருவரும் ஒரே மாதிரியான சாதனைகளை செய்து இருக்கிறார்கள். ஆனால் டெஸ்ட் கிரிக்கெட் என்று வந்து விட்டால், அதில் ரோகித் சர்மாவை விட விராட் கோலி பல மடங்கு உயர்ந்த வீரர். இதனால் இருவரையும் நான் ஒரே தட்டில் மதிப்பிட மாட்டேன்.”
“நான் இருவரும் அடித்த டெஸ்ட் ரன்களை கூறினாலே உங்களுக்கு உண்மை புரிந்து விடும். நான் சொல்வதை நம்ப வேண்டும் என்று அவசியம் இல்லை. தென்னாப்பிரிக்கா,இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் விராட் கோலி 12 சதம் அடித்திருக்கின்றார்.”
இதையும் படிங்க: WI vs ENG: 6,6,6,1,6,6 – ஒரே ஓவரில் 31 ரன்கள் அடித்த வெஸ்ட் இண்டீஸ்.. இறுதியில் இங்கிலாந்து தந்த டிவிஸ்ட்
“ஆனால் ரோகித் சர்மா இங்கிலாந்துக்கு எதிராக ஒரே ஒரு சதம் மட்டும் தான் அடித்து இருக்கின்றார். 100 இன்னிங்ஸ்களுக்கு மேல் விளையாடி இந்த நாடுகளில் ஒரு சதம் தான் ரோகித் அடித்திருக்கிறார். இதில் அவருடைய சராசரி 40 என்று அளவில் இருக்கின்றது.இங்கிலாந்தில் அதற்கு முன்பு ரோகித் சர்மா விளையாடி இருந்தால் அவருடைய சராசரி 30க்கு கீழ் வந்திருக்கும். எனவே டெஸ்ட் கிரிக்கெட் பற்றி பேசும்போது விராட் கோலியுடன் ரோகித்தை ஒப்பிடாதீர்கள்.அதை நிறுத்துங்கள்” என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கூறியுள்ளார்.






