இந்திய அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் கே எல் ராகுல் குறித்து கெவின் பீட்டர்சன் பதிவிட்டு இருக்கும் ஒரு கருத்தால் தற்போது குழப்பம் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியா இங்கிலாந்து அணிகள் அடுத்த மாதம் ஜூன் 20ஆம் தேதி முதல் 5 போட்டிகள் கொண்ட மெகா டெஸ்ட் தொடரில் விளையாடுகின்றன. இதற்குப் பயிற்சியாக இந்திய ஏ அணி இங்கிலாந்து சென்று அதிகாரப்பூர்வமற்ற நான்கு நாட்கள் கொண்ட இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கிறது.
கருண் நாயர் இரட்டை சதம்
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் பல வருடங்களுக்குப் பிறகு கருண் நாயர் இடம்பெற்று இருக்கிறார். உள்நாட்டில் சிவப்பு பந்து வெள்ளை பந்து என எல்லா தொடர்களிலும் டன் கணக்கில் ரன்கள் குவித்த காரணத்தினால், அவரை இந்திய தேர்வுக் குழுவால் நிராகரிக்க முடியாத நிலை ஏற்பட்டு தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
இந்த நிலையில் நேற்று இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிராக துவங்கிய முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் சிறப்பாக விளையாடி முதல் நாளில் சதம் அடித்தார். இந்த நிலையில் தொடர்ந்து இன்று போட்டி நடைபெற்ற நிலையில் அவர் இரட்டை சதம் அடித்து, இந்திய பிளேயிங் லெவனில் தனக்கு வாய்ப்பு தந்தே ஆக வேண்டும் என கட்டாயப்படுத்தி இருக்கிறார்.
திடீரென புறப்படும் கேஎல்.ராகுல்
இந்த நிலையில் இருவருடனும் ஐபிஎல் தொடரில் டெல்லி அணியில் மென்டராக பணியாற்றிய கெவின் பீட்டர்சன் பதிவில் ” நேற்று இந்திய ஏ அணிக்கு கருண் நாயர் சதம் அடித்தார். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கேட்டு முன்கூட்டியே இங்கிலாந்து செல்வதற்காக கேஎல்.ராகுல் புறப்பட்டு இருக்கிறார். இரண்டு ஜெம்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதையும் படிங்க : 2018லயே மும்பைய பார்த்து நொந்து போயிட்டேன்.. கடவுளே ரோகித் பக்கம்.. விசாரிக்கணும் இதை- அஸ்வின் சுவாரசிய கருத்து
இந்த நிலையில் ஒரே மாநிலத்தைச் சேர்ந்த கருண் நாயரை பார்த்து கேஎல்.ராகுல் பயப்படுவதாகவும், தனக்கு இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாய்ப்பு இல்லாமல் போய்விடக் கூடாது என அவர் உடனடியாக இங்கிலாந்து புறப்பட்ட செல்வதாகவும் சிலர் கொண்டு சமூக வலைதளத்தில் பதிவிட்டதால் குழப்பம் ஏற்பட்டிருக்கிறது. ஆனால் கெவின் பீட்டர்சன் இருவரது செயல்பாட்டையும் பாராட்டிதான் பதிவை வெளியிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






