2018லயே மும்பைய பார்த்து நொந்து போயிட்டேன்.. கடவுளே ரோகித் பக்கம்.. விசாரிக்கணும் இதை- அஸ்வின் சுவாரசிய கருத்து

0
631
Ashwin

ஐபிஎல் தொடரில் மற்ற எல்லா அணிகளையும் விட மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எல்லா நேரத்திலும் பெரிய அதிர்ஷ்டம் இருந்திருப்பதாகவும் அதை தானே நேரில் அனுபவித்து இருப்பதாகவும் ரவிச்சந்திரன் அஸ்வின் சுவாரசியமான சம்பவத்தை வெளியிட்டிருக்கிறார்.

நேற்று எலிமினேட்டர் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு சில நல்ல கேட்ச் வாய்ப்புகள் விடப்பட்டன. இதை பயன்படுத்திக் கொண்ட அவர் 50 பந்தில் 81 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்தார். நேற்று தொடர் முழுக்க சிறப்பாக பந்து வீசிய பிரசித் கிருஷ்ணாவால் சிறப்பாக பந்து வீச முடியவில்லை. அவர் விக்கெட்டுக்காக வீசிய பந்துகள் எல்லாம் ரன்களாக மாறின.

- Advertisement -

கடவுளின் கை ரோகித் சர்மாவுக்கு

இதுகுறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது “இந்த தொடரில் பிரசித் கிருஷ்ணா பர்பில் தொப்பியை வெல்லக்கூடியவராக இருந்தார். அவர் செயல்பட்டுக் கொண்டிருந்த விதத்திற்கு நேற்று வேறு ஒரு லெவலுக்கு சென்று இருக்க வேண்டும். அவர் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசினார். ஆனால் அவரை ஜானி 26 ரன்னுக்கு ஒரு ஓவரில் அடித்தார். ஆனால் அந்த ஓவரில் இரண்டு மூன்று பந்துகளில் விக்கெட்டை வீழ்த்த பிரசித் கிருஷ்ணா முயற்சி செய்தார். அது ஒரு கூர்மையான ஓவர். ஆனால் அவரது முயற்சி பலிக்கவில்லை. ஆட்டம் மும்பை பக்கம் சென்று விட்டது”

“மேலும் அங்கு ஒரு கேட்ச் தவற விடப்பட்டது. அடுத்து சிராஜ் ஓவரில் ரோகித் சர்மாவுக்கு குஷால் மெண்டிஸ் கேட்ச் தவறவிட்டார். இதற்குப் பிறகு ரோகித் சர்மாவை தடுக்க முடியவில்லை. கடவுளின் கை ரோகித் சர்மா பக்கம் இருப்பது போல தோன்றியது. அவருக்கு நிறைய அதிர்ஷ்டம் இருந்தது. அதை அவரும் சரியாக பயன்படுத்திக் கொண்டார்”

- Advertisement -

2018ல எனக்கு நடந்தது

“மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இப்படி ஒவ்வொரு முறையும் நான் ஒரு வாய்ப்புகளை பார்த்திருக்கிறேன். 2018 ஆம் ஆண்டு நான் பஞ்சாப் வழிநடத்தியபோது, அவர்கள் ஒரு போட்டியில் 80 ரன்னுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து விட்டார்கள். அப்பொழுது மின்விளக்குகளில் பிரச்சனை ஏற்பட்டது. 20 நிமிடம் இடைவெளி கிடைத்தது. பிறகு போட்டி தொடங்கியதும் பொல்லார்டு அதிரடியாக ஆடி 180 முதல் 200 வரை எடுத்து சென்று விட்டார். ஆட்டம் எங்களை விட்டு போய்விட்டது”

இதையும் படிங்க : ஐபிஎல் எலிமினேட்டரில் மும்பை ஜெயிக்க காரணம் ரோகித் ஹர்திக் இல்ல.. கில்தான் முக்கிய காரணம் – உத்தப்பா விமர்சனம்

“நிச்சயமாக அவர்கள் அதிர்ஷ்டசாலிகள். விளையாட்டில் எப்பொழுதும் அதிர்ஷ்டம் என்பது கிடைக்கத்தான் செய்யும். ஆனால் இவர்களுக்கு மட்டும் எப்படி எப்பொழுதும் அதிர்ஷ்டம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -