சூரியவன்சி பற்றி கில் அப்படி பேசி இருக்க கூடாது.. குஜராத் கோச் நானே சொல்றேன் – பார்த்திவ் படேல் பேச்சு

0
196
Gill

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக 14 வயதில் அதிரடி சதம் அடித்த வைபவ் சூரியவன்சி குறித்து, குஜராத் அணியின் கேப்டன் கில் நல்ல முறையில் பேசி இருக்க வேண்டும் என்றும், அவர் அப்போது பேசிய விதம் சரியாக இல்லை என குஜராத் டைட்டன்ஸ் பயிற்சியாளர் பார்த்திவ் படேல் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வைபவ் சூரியவன்சி 35 பந்தில் அதிரடி சதம் அடித்தார். இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த வயதில் சதம் அடித்த வீரர் என்றும், ஐபிஎல் தொடரில் அதிவேகமாக சதம் அடித்த இந்திய வீரர் எனவும் பல்வேறு சிறப்பு மிக்க சாதனைகளை படைத்தார்.

- Advertisement -

கண்டுகொள்ளாத கில்

வைபவ் சூரியவன்சிக்கு 14 வயது தான் ஆகிறது என்கின்ற காரணத்தினால், அவர் படைத்திருக்கும் சாதனை கற்பனை செய்து பார்க்க முடியாத அளவுக்கு பிரமாண்டமாக இருக்கிறது. காரணமாக அவர் தற்பொழுது இந்தியா தாண்டி உலக அளவில் பலராலும் கவனம் பெற்ற இளம் வீரராக ஒரே நாளில் மாறி இருக்கிறார்.

இந்த நிலையில் அந்த போட்டி முடிந்த பிறகும் அடுத்த நாளிலும் அவருக்கு பெரிய அளவில் பலராலும் பாராட்டுகள் குவிந்தது. சச்சின் தனிப்பட்ட முறையில் அவரை பாராட்டி இருந்தார். இந்த நிலையில் போட்டி முடிந்ததும் சூரியவன்சி குறித்து பெரிதாக எதுவுமே பேசவில்லை. இது அவருடைய நாள் என்று மட்டும் சாதாரணமாக குறிப்பிட்டு சென்று விட்டார். தற்பொழுது இதுதான் பிரச்சினையாக மாறி இருக்கிறது.

- Advertisement -

அவருக்கு கிரெடிட் கொடுத்திருக்க வேண்டும்

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கில் இந்த அளவிற்கு பேசியதை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும், அந்த வீரர் செய்திருக்கும் சாதனை மிகப் பெரியது என்பதால் அதற்கான மனம் திறந்து தெரிவித்திருக்க வேண்டும் எனவும் உடனடியாக தனது எதிர்ப்பை பதிவு செய்திருந்தார். இந்த நிலையில் இதை குஜராத் பயிற்சியாளர் பார்த்திவ் படடேல் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.

இதையும் படிங்க : சாய் சுதர்சன நெட்ஸ்ல முதல்ல பார்த்ததும்.. எனக்குள்ள இத நானே சொல்லிக்கிட்டேன் – பட்லர் பேட்டி

இதுகுறித்து பார்த்திவ் படேல் பேசும்பொழுது ” இது அவருடைய நாள் என்று நீங்கள் கூறலாம். அதில் எந்த தவறும் கிடையாது. ஆனால் அதே சமயத்தில் நாம் இப்படியான ஒரு திறமையை இதற்கு முன்னால் பார்த்ததில்லை. எனவே இதற்கான மதிப்பை நாம் கொடுக்க வேண்டும். போட்டி முடிந்த பிறகு எங்கள் வீரர்களுக்கு நாங்கள் இதைத்தான் சொன்னோம்” என்று கூறியிருக்கிறார். இதன் மூலம் கில் கூறிய கருத்தில் அவருக்கு முழுதாக உடன்பாடு இல்லை என்று தெரிகிறது.

- Advertisement -