சாய் சுதர்சன நெட்ஸ்ல முதல்ல பார்த்ததும்.. எனக்குள்ள இத நானே சொல்லிக்கிட்டேன் – பட்லர் பேட்டி

0
171
Buttler

நடப்பு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடும் இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லர் சக அணி வீரரான சாய் சுதர்சனை முதன் முதலில் பார்த்தபோது தனக்கு என்ன மனதில் தோன்றியது? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணி மிக சிறப்பான முறையில் விளையாடிய வருகிறது. அந்த அணி 10 போட்டிகளில் 7 போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை 14 புள்ளிகள் உடன் பிடித்திருக்கிறது. மேலும் முதல் இரண்டு இடங்களுக்கு முன்னேறி செல்வதற்கான வாய்ப்பு திறமையும் அந்த அணிக்கு இருக்கிறது.

- Advertisement -

பேட்டிங் பவுலிங் அசத்தல்

தற்போது அதிகரின் அடித்தவர்களுக்கான பட்டியலில் முதல் நான்கு இடங்களில் குஜராத் டைட்டன்ஸ் அணியைச் சேர்ந்த சாய் சுதர்சன், கேப்டன் சுப்மன் கில் மற்றும் ஜோஸ் பட்லர் மூவரும் இடம் பெற்று இருக்கிறார்கள். இவர்கள் மூவரும் பேட்டிங் வரிசையில் தொடர்ந்து வந்து குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு என்ன மாதிரியான தாக்கத்தை தருகிறார்கள் என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மேலும் இந்த முறை பந்துவீச்சில் சிராஜ் சிறப்பாக திரும்பியிருக்கிறார். சுழல் பந்துவீச்சில் சாய் கிஷோர் மற்றும் ரசீத் கான் நல்ல முறையில் பங்கு பேசுகிறார்கள். அதே சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு பிரசித் கிருஷ்ணா பந்துவீச்சு பல வகைகளில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. அவருடைய வேகமும் அதிகமாக இருக்கிறது. மேலும் அதிக விக்கெட் கைப்பற்றியவர்களுக்கான பர்பில் தொப்பியை அவரே வைத்திருக்கிறார்.

- Advertisement -

சாய் சுதர்சனை பார்த்ததும் தோன்றியது

இந்த நிலையில் சாய் சுதர்சன் பற்றி பேசி இருக்கும் ஜோஸ் பட்லர் கூறும் பொழுது ” முதல்முறையாக நான் வலைப்பயிற்சியில் சாய் சுதர்சனை பார்த்த பொழுது அவர் எவ்வளவு சிறந்தவராக இருக்கிறார் என நானே எனக்குள் சிலமுறை சொல்லிக் கொண்டேன். அவர் மிகவும் நிலைத்தன்மை கொண்டவர்”

இதையும் படிங்க : SRH வீரர்கள் மைதானத்துல இல்ல மாலத்தீவுல இருக்காங்க.. அந்த ஆட்டத்தை இங்க போடலாமே – ஹர்பஜன் சிங் விமர்சனம்

“அவர் எடுக்கும் வேலைக்கான முயற்சி, விளையாட்டைப் பற்றிய அவருடைய புரிதல், தினமும் தொடர்ந்து வந்து பணியாற்றும் அவருடைய பணிவு மிகவும் அற்புதமானது. அவர் சிறந்த நிலைத்தன்மையை காட்டுகிறார். அவருடைய சிறந்த குணங்கள் மற்றும் உழைப்புக்கு சரியான வெகுமதிகளை பெற்றுக் கொண்டிருக்கிறார்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -