கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்டை வாங்கி கேப்டனாக அறிவித்தது. மேலும் இந்த ஐபிஎல் தொடரிலும் லக்னோ அணி சிறப்பான முறையில் செயல்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் லக்னோ அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் வீரர்கள் தக்க வைக்கும் முறை குறித்து சில கடுமையான விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
இந்த விதி முற்றிலும் வினோதமானது
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் 17 வருடங்கள் முடிவடைந்த தற்போது 18 வது வருடத்தில் லீக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் ஒவ்வொரு 3 வருடத்திற்கு ஒருமுறை ஒவ்வொரு அணியும் தங்கள் முக்கிய ஐந்து வீரர்களை தக்கவைத்து மீதமுள்ள வீரர்களை மெகா ஆக்ஷனில் எடுப்பார்கள். இதுவே ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒரு முறை இந்த நடைமுறையானது செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில் லக்னோ அணி கடந்த முறை கே எல் ராகுலை வெளியே விடுவித்த நிலையில் அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை 27 கோடி ரூபாய்க்கு வாங்கி கேப்டனாக நியமித்தது. பூரான், ஆயுஸ் பதோணி, ரவி பிஷ்னாய், மாயாங்க் யாதவ் போன்ற வீரர்களை லக்னோ அணி தக்க வைத்தது. இந்த சூழ்நிலையில் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் மூன்று வருடத்திற்கு ஒருமுறை 5 வீரர்களை மட்டுமே தக்க வைத்து மீண்டும் 20 வீரர்களை ஏலத்தில் எடுப்பது வினோதமானது என்றும் இது போன்ற ஒரு விதியை நான் எங்குமே பார்த்ததில்லை எனவும் சில விமர்சனங்களை முன் வைத்திருக்கிறார்.
நானாக இருந்தால் இதை செய்வேன்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “கடந்த வருடம் நாங்கள் 25 வீரர்களை மொத்தமாக வைத்திருந்தோம். அதில் ஐந்து வீரர்களை தக்கவைத்துக் கொண்டோம். அதற்குப் பிறகு 20 வீரர்களை மெகா ஏலத்தில் தேர்ந்தெடுத்தோம். பின்னர் ஒவ்வொரு மூன்று வருடத்திற்கு ஒரு முறையும் மெகா ஏலத்தை நடத்துகின்றனர். இது முற்றிலும் வினோதமாக இருக்கிறது. இதுபோன்று நடக்கும் வேறு ஏதாவது ஒரு விளையாட்டை நீங்கள் சொல்ல முடியுமா? என்னை பொருத்தவரை நான் 20 வீரர்களை தக்க வைக்கும் ஒரு கலாச்சாரத்தை உருவாக்குவேன்.
இதையும் படிங்க:நான் ஐபிஎல் தொடரிலிருந்து விலக இதுவே காரணம்.. இது நிச்சயம் எளிதான முடிவு அல்ல – இங்கி ஹாரி ப்ரூக் பேட்டி
ஆனால் அது அப்படி செயல்படாது. மேலும் இந்திய வீரர்களின் உழைப்பு குறித்து கூறும் போது இடைவிடாது பயிற்சி, பயிற்சி என்று என்னை திகைக்க வைக்கிறார்கள். நாங்கள் தான் கடினமான உழைப்பாளிகள் என்று நினைத்தேன். ஆனால் இவர்கள் வேறு மட்டத்தில் செயல்படுகின்றனர்” என்று ஜஸ்டின் லாங்கர் பேசியிருக்கிறார். அதாவது தக்கவைப்பு வீரர்கள் பட்டியலை அதிகப்படுத்த வேண்டும் எனவும், மூன்று வருடத்திற்கு ஒருமுறை நடத்தப்படும் மெகா ஆக்சன் தவறு என்று ஜஸ்டின் லாங்கர் மறைமுகமாக பேசியிருக்கிறார்.






