இனி ஐபிஎல் போட்டிகளை இலவசமாக மொபைலில் பார்க்க முடியாது.. அம்பானி வைத்த டிவிஸ்ட்.. எவ்வளவு பணம்?

0
69

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த போட்டிகளை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளை மொபைல் ஃபோனில் இலவசமாக பார்க்க வழிவகை செய்யப்பட்டிருந்தது.

குறிப்பாக ஜியோ சினிமாவில் ஐபிஎல் போட்டிகள் இலவசமாக நாம் பார்த்தோம். தற்போது ஜியோ சினிமாவும் டிஸ்னி ஹாட்ஸ்டாரும் இணைந்து ஜியோ ஹாட் ஸ்டார் என புதிய ஆப்பாக வந்திருக்கிறது. தற்போது இந்த புதிய ஆப் மூலம் ஒரு மிகப்பெரிய ஆப்பை அம்பானி குடும்பம் வைத்திருக்கிறது.

- Advertisement -

இனி இலவசமாக பார்க்க முடியாது:

இனி ஐபிஎல் போட்டிகளை பார்க்க காசு கட்ட வேண்டும் என்ற நிலை உருவாகி இருக்கிறது. ஐபிஎல் போட்டியின் உரிமம் பல்லாயிரம் கோடி ரூபாயை தாண்டி இருக்கிறது. இதனால் வெறும் விளம்பரத்தை வைத்து மட்டும் அவ்வளவு பணத்தை சம்பாதிக்க முடியாது என்பதால் தற்போது ரசிகர்களிடம் இருக்கும் ஆர்வத்தை பணமாக மாற்ற அம்பானி குடும்பத்தினர் முடிவு எடுத்திருக்கின்றார்.

இதனால் ஜியோ ஹாட்ஸ்டார் ஆப்பை நீங்கள் ரீசார்ஜ் செய்தால் மட்டுமே ஐபிஎல் போட்டிகளை பார்க்க முடியும். இதற்கு 150 ரூபாய் வரை நாம் ரீசார்ஜ் செய்ய வேண்டும். ஒருவேளை உங்களிடம் ஜியோ சிம் இருந்தால் உங்களுக்கான ரீசார்ஜ் தொகை குறையும். அதாவது ஜியோ மொபைல் ரீசார்ஜ் செய்யும் போது 100 ரூபாய் கட்டணத்தை நீங்கள் செலுத்தி ரீசார்ஜ் செய்தால், ஐந்து ஜிபி உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

எவ்வளவு கட்டணம் செலுத்தனும்:

மேலும் 90 நாட்களுக்கு உங்களால் ஜியோ ஹாட்ஸ்டாரை இலவசமாக பார்க்க முடியும். இதேபோன்று 195 ரூபாய்க்கு நீங்கள் ரீசார்ஜ் செய்தால் 90 நாட்கள் ஜியோ ஹாட்ஸ்டார் ஐ பார்க்க முடியும். உங்களுக்கு பதினைந்து ஜிபி கிடைக்கும். ஆனால் இந்த ஐந்து ஜிபியும், 15 gbயும் ஒரு வாரத்திற்கு கூட தாங்காது.

இதையும் படிங்க: பிராட் ஹாக் செஞ்சது அருவருப்பானது.. இது ஆஸி கிரிக்கெட்டுக்கு அசிங்கம் – பாகிஸ்தான் ரசிகர்கள் கோபம்

இதனால் நீங்கள் கூடுதலாக குறைந்தபட்சம் 230 ரூபாய் செலவு செய்தால் தான் உங்களுக்கு 30 ஜிபி தனியாக கிடைக்கும். இதன் மூலம் ஐபிஎல் போட்டியை வைத்து ஜியோ ரீசார்ஜ் மூலம் பெரிய அளவு பணம் சம்பாதிக்க அம்பானி முடிவெடுத்திருக்கிறார். இது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

- Advertisement -