ஆஸ்திரேலிய முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் பிராட் ஹாக் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் குறித்து வெளியிட்ட சமூக வலைதள வீடியோ ஒன்று தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களால் பெரிய அளவில் விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது.
சமீபத்தில் பேசி இருந்த பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஸ்வான் தானும் விராட் கோலியும் சில விஷயத்தில் ஒரே மாதிரியானவர்கள் என்று கூறியிருந்தார். குறிப்பாக தாங்கள் இருவரும் ரன் ஆவரேஜில் கவனம் செலுத்தாமல் விளையாடுகிறோம் ஆனால் ரன் ஆவரேஜ் சிறப்பாக இருக்கிறது என்று கூறியிருந்தார். மேலும் முகமது ரிஸ்வானின் ஆங்கிலம் மிகவும் சுமாராக இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிராட் ஹாக் வெளியிட்ட வீடியோ
முகமது ரிஸ்வான் விராட் கோலியும் தானும் ஒன்று என்று கூறியதையும், மேலும் முகமது ரிஸ்வானுக்கு ஆங்கிலம் சரியாக பேச தெரியாததை வைத்தோம், அதை கேலி செய்யும் விதமாக, முகமது ரிஸ்வான் போன்ற தோற்றம் கொண்ட ஒருவரை தான் பேட்டி எடுப்பது போல பிராட் ஹாக் ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.
அந்த வீடியோவில் பிராட் ஹாக் முகமது ரிஸ்வான் போன்ற தோற்றம் கொண்டவரிடம் எப்படி விராட் கோலி நீங்களும் ஒன்று என்று கேட்கிறார். அதற்கு முகமது ரிஸ்வான் போல இருப்பவர் “அவர் தண்ணீர் குடிக்கிறார், நானும் தண்ணீர் குடிக்கிறேன். நாங்கள் இருவரும் உணவு உண்கிறோம். எனவே நாங்கள் ஒரே மாதிரியானவர்கள்” என்று பதில் அளிக்கிறார். மேலும் அவர் பாகிஸ்தானில் தான் பேசுகின்ற ஆங்கிலம் மிகச் சிறப்பாக இருப்பதாக எல்லோரும் சொல்வதாகவும்” கூறுகிறார்.
ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு அசிங்கம்
இந்த நிலையில் தனியே ஒரு கிரிக்கெட் வீரரின் ஆங்கில புலமை மற்றும் அவர் கூறிய கருத்தை இழிவு செய்யும் விதமாக ஒரு முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் இவ்வாறான வீடியோ வெளியிட்டு இருப்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
இதையும் படிங்க : 13 வயசு பழக்கம்.. என் நண்பன் பிரித்வி ஷா செய்யும் தப்பு.. இதை மாத்திக்கணும்- ஷஷான்க் சிங் கருத்து
பாகிஸ்தான் கேப்டன் பேசும் ஆங்கிலத்தை கேலி செய்யும் ஒரு வீடியோவில் பிராட் ஹாக் வருவது ஆஸ்திரேலியா கிரிக்கெட்டுக்கு அசிங்கம் என்று ஒரு பாகிஸ்தான் ரசிகர் கூறியிருக்கிறார். இன்னொரு பாகிஸ்தான் ரசிகர் இப்படியான ஒரு மனநிலை மிகவும் அருவருப்பானது என்று கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களிடம் இருந்து இப்படியான பல்வேறு கோபமான கருத்துக்கள் சமூக வலைதளம் முழுவதும் வெளியாகி கொண்டு இருக்கிறது.






