நடப்பு 2025 ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணியின் பயிற்சியாளர்கள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுவார்கள் என்பதை பார்ப்பதற்கு தான் ஆர்வமாக இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் கூறியிருக்கிறார்.
தற்போது கேகேஆர் அணிக்கு மென்டர் பொறுப்பில் இருந்து கம்பீர் விலக வெஸ்ட் இண்டீஸ் பிராவோ புதிய மென்டராக நியமிக்கப்பட்டிருக்கிறார். மேலும் தலைமை பயிற்சியாளராக சந்திரகாந்த் பண்டிட் தொடர்கிறார். இத்துடன் இந்த சீசனுக்கு புதிய கேப்டனாக ரகானே மற்றும் துணை கேப்டனாக வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
சந்திரகாந்த் பண்டிட் – பிராவோ
சந்திரகாந்த் பண்டிட் ரஞ்சித் தொடரில் மாநில அணிகளுக்கு மிகப்பெரிய வெற்றி பெற்ற பயிற்சியாளராக இருந்து கேகேஆர் அணிக்கு வந்திருக்கிறார். இவர் பயிற்சியில் மிகவும் கண்டிப்பானவர் என்று சொல்லப்படுகிறது. அதே சமயத்தில் பிராவோ ஜாலியானவர் மேலும் அவர்கள் நாட்டு நேரப்படி இந்திய நேரத்தில் உறங்கக் கூடியவர். இத்துடன் புதிய கேப்டன் ரகானேவுக்கு அதிரடி வீரர்களுடன் இணைவதில் சிக்கல் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இது குறித்து ஹர்பஜன் சிங் பேசும்பொழுது “சந்திரகாந்த் பண்டிட் மற்றும் பிராவோ இருவரும் முற்றிலும் வேறுபட்ட ஆளுமைகள். ஒருவர் காலை 5:00 மணிக்கு எழுவார், இன்னொருவர் காலை 6:00 மணிக்கு உறங்க செல்வார். அவர்கள் எவ்வாறு ஒருங்கிணைந்து வேலை செய்கிறார்கள் என்பதை நாம் பார்க்க வேண்டும்”
ரகானே மல்யுத்தமே செய்ய வேண்டி இருக்கும்
“கொல்கத்தா பேட்டிங் வரிசையில் தன்னுடைய நிலை மற்றும் பங்கு என்ன என்பதை கண்டறிவதற்கு கேப்டன் ரகானே மல்யுத்தம் செய்ய வேண்டியதாக இருக்கும். இந்த அணியில் வெங்கடேஷ் ஐயர், ரசல் மற்றும் ரிங்கு சிங் என அதிரடி ஆட்டக்காரர்கள் இருக்கிறார்கள். ரகானேவுக்கு மூன்றாம் இடத்தில் விளையாடுவதற்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. பத்து ஓவர் தாண்டி வந்து விளையாடுவது அவரால் முடியாதது”
இதையும் படிங்க : டிவி ஒளிபரப்பாளர்கள் இதை செய்யறது தப்பு.. நீங்க நியாயமா மக்களுக்கு அதை செய்யுங்க – விராட் கோலி அறிவுரை
“கொல்கத்தா அணி நிர்வாகம் ரகானேவை மட்டுமே தேர்வு செய்திருந்தால், அதை செய்வதற்கு வெங்கடேஷ் ஐயர், ரசல், சுனில் நரைன் ஆகியோர் இருக்கிறார்கள். கேகேஆர் அணி பவர் பிளேவில் விக்கட்டை இழந்தால் ரகானே வந்து விளையாட சரியாக இருக்கும். அதைத் தாண்டி விட்ட பிறகு அவர் வந்து விளையாடுவது என்றால் அது அவருடைய பலம் கிடையாது” என்று கூறியிருக்கிறார்.






