டிவி ஒளிபரப்பாளர்கள் இதை செய்யறது தப்பு.. நீங்க நியாயமா மக்களுக்கு அதை செய்யுங்க – விராட் கோலி அறிவுரை

0
82
Virat

இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்பு கூடிய தொலைக்காட்சிகள் வீரர்களை விட்டுவிட்டு விளையாட்டை மக்களுக்கு கற்றுக் கொடுக்க வேண்டும் என விமர்சனம் செய்திருக்கிறார்.

தனியார் நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட விராட் கோலி பலதரப்பட்ட கேள்விகளுக்கு வெளிப்படையாக பதில் அளித்து இருக்கிறார். அதில் அவருடைய கிரிக்கெட் ஓய்வு எப்பொழுது இருக்கும் என்பது வரை அவர் வெளிப்படையாக பேசி இருக்கிறார். இந்த வகையில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அவர் ஓய்வு பெற மாட்டார் என்று தெரிகிறது.

- Advertisement -

விராட் கோலியை பின் தொடரும் ஊடகங்கள்

இந்திய கிரிக்கெட் தாண்டி விளையாட்டு வீரர்களில் மீடியாக்களால் அதிகம் பின் தொடரப்படும் வீரராக இந்தியாவின் விராட் கோலி இருந்து வருகிறார். இந்தியாவில் இருந்து உருவான விளையாட்டு வீரர்களின் மிக அதிகபட்ச புகழை இந்தியா தாண்டி பெற்ற வீரராகவும் விராட் கோலி இருக்கிறார்.

அவருடைய ஆக்ரோஷமான கள செயல்பாடு மற்றும் கிரிக்கெட் திறமைகள், இத்துடன் தீவிரமான உடல் தகுதி ஆகியவை உலகெங்கும் இருக்கும் இளைஞர்களிடம் விராட் கோலி சென்று சேர்த்து இருக்கிறது. இதன் காரணமாக மீடியாக்கள் அவர் செய்கின்ற சின்ன சின்ன விஷயங்களையும் கூட செய்தியாகவும் நிகழ்ச்சியாகவும் மாற்றுகின்றன. உதாரணமாக விராட் கோலிக்கு பிடித்த உணவுகள், விராட் கோலிக்கு பிடித்த இடங்கள் என்றெல்லாம் கிரிக்கெட் இடைவேளைகளில் நிகழ்ச்சிகள் செய்யப்படுகிறது.

- Advertisement -

என்னை தொடர்வதை விட்டு விடுங்கள்

இது குறித்து பேசி இருக்கும் விராட் கோலி கூறும் பொழுது “இந்தியாவை விளையாட்டை நோக்கி முன்னேறும் நாடாக கொண்டு செல்வதற்கு நாங்கள் தொலைநோக்காக உழைத்துக் கொண்டிருக்கிறோம். அதற்கான அடித்தளம் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. இது விளையாட்டு சம்பந்தப்பட்ட அனைவரின் கூட்டு ஒத்துழைப்பாக இருக்க வேண்டும். இது உள்கட்ட அமைப்பை ஏற்படுத்தும் மற்றும் பணத்தைக் கொண்டு வரும் அமைப்பு சம்பந்தப்பட்டது மட்டும் கிடையாது. இதில் பார்வையாளர்களும் முக்கியமானவர்கள். எனவே நமக்கு இது குறித்த கல்வி தேவை”

இதையும் படிங்க : வெறும் 10 ஓவர்.. 91 ரன்.. பாகிஸ்தான் மீண்டும் படுதோல்வி.. நியூசிலாந்து அணி அபார வெற்றி

“ஒளிபரப்பு நிகழ்ச்சியானது விளையாட்டு பற்றி பேச வேண்டும். நான் நேற்று மதிய உணவுக்கு என்ன சாப்பிட்டேன், எனக்கு டெல்லியில் மிகவும் பிடித்த இடம் எது என்பது குறித்து பேசிக் கொண்டிருக்கக் கூடாது. ஒரு கிரிக்கெட் போட்டியில் நீங்கள் இதையெல்லாம் செய்து கொண்டிருக்கக் கூடாது. இதற்கு பதிலாக ஒரு வீரர் எப்படி தயாராகிறார் என்பது குறித்து நீங்கள் பேசலாம்” என்று தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -