விராட் கோலிக்கு மட்டும் இதை செஞ்சிருந்தா.. கண்டிப்பா நாங்க ஜெயிச்சிருப்போம் – முன்னாள் ஆஸி கேப்டன் கிளார்க்

0
70

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் அரை இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளது.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான மைக்கேல் கிளார்க் இந்திய அணி வெற்றி பெற்ற விதம் குறித்து சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணி சிறப்பான வெற்றி

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வலுவாக இருக்கும் இந்திய அணி இதுவரை 3 போட்டிகளில் லீக் சுற்றில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் முடிவில் 264 ரன்கள் குவித்தது. மேலும் ஆஸ்திரேலிய அணியும் தொடக்கத்தில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணிக்கு அதிர்ச்சி கொடுத்தது.

ஆனால் அதற்கு பின்னர் களம் இறங்கிய விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் நிதானமாக விளையாடி வெற்றியை இந்திய அணியின் பக்கம் கொண்டு வந்தனர். அதிலும் குறிப்பாக விராட் கோலி எந்த விதத்திலும் அவசரப்படாமல் சிறப்பாக விளையாடி இன்னிங்சை கட்டமைத்து 84 ரன் குவித்து வெளியேறினார். இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க், இந்திய அணியை வீழ்த்த விராட் கோலிக்கு போதிய நெருக்கடி கொடுக்கவில்லை என்று சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

விராட் கோலிக்கு இதை செய்யல

இதுகுறித்து மைக்கேல் கிளார்க் விரிவாக கூறும்போது “நாங்கள் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற வேண்டி இருந்தது. அவர்கள் 50 ஓவர்கள் வரை பேட்டிங் செய்தால் அந்த ரன்கள் இலக்கை துரத்தி வெற்றி பெறுவார்கள். அது அவ்வளவு எளிதாக இருந்தது. ஆரம்பத்தில் நாங்கள் சில வாய்ப்புகளை தவற விட்டோம். ஒருவேளை நாங்கள் மைதானத்தை இறுக்கமாக்கி தாக்குதல் ஆட்டத்தை தூண்டவில்லை என்று நான் நினைக்கிறேன். விராட் கோலி என்ன ஒரு விசித்திரமான வீரர், நான் பார்த்ததிலேயே சிறந்த ஒரு நாள் வீரராக அவர் இருக்கிறார்.

இதையும் படிங்க:கவாஸ்கர் சொல்வது முழுமையான முட்டாள்தனம்.. பாக் கிரிக்கெட் இதை சரியா செஞ்சா.. யாரையும் ஜெயிக்க முடியும் – முன்னாள் கோச்

அவர் போட்டியில் சிறந்த சேசிங் வீரர் என்பதை அவரது சாதனைகள் சொல்கிறது. இது மிகவும் எளிமையாக இருக்கிறது, நீங்கள் விராட் கோலியை அவுட் செய்திருந்தால் நீங்கள் அந்த போட்டியை வெல்வதற்கு மிகப்பெரிய வாய்ப்பு இருந்திருக்கும். நாங்கள் அவரை 50களில் வீழ்த்தினோம். ஆனால் நாங்கள் அவரை போதுமான அளவு தாக்கியதாக தெரியவில்லை” என்று மைக்கல் கிளார்க் பேசியிருக்கிறார். அந்த ஆட்டத்தில் 84 ரன்கள் குவித்த விராட் கோலி இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -