கவாஸ்கர் சொல்வது முழுமையான முட்டாள்தனம்.. பாக் கிரிக்கெட் இதை சரியா செஞ்சா.. யாரையும் ஜெயிக்க முடியும் – முன்னாள் கோச்

0
30

சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை நடத்தும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி மோசமான தோல்வியை சந்தித்து அடுத்த சுற்றுக்கு கூட தகுதி பெறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணி குறித்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்ததற்கு பாகிஸ்தான் முன்னாள் பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

சுனில் கவாஸ்கர் விமர்சனம்

2017ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை பாகிஸ்தான் அணி வீழ்த்தி கோப்பையை கைப்பற்றிய நிலையில், இந்த ஆண்டு தொடரை பாகிஸ்தான் நிர்வாகம் நடத்தியது. நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி அதற்குப் பிறகு இந்திய அணியிடம் தோல்வியை தழுவி கிட்டத்தட்ட தொடரிலிருந்து வெளியேறியது. அதற்குப் பிறகு மழையின் காரணமாக வங்கதேச அணிக்கு எதிரான போட்டி ரத்து செய்யப்பட்ட நிலையில் 5 நாட்களில் தொடரை விட்டே முதல் அணியாக பாகிஸ்தான் அணி வெளியேறியது.

இந்த சூழ்நிலையில் சர்வதேச பாகிஸ்தான் அணியை இந்தியாவின் பி டீம் அல்லது சி டீம் விளையாடினால் கூட பாகிஸ்தான் அணியை தோற்கடித்து விடும் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் விமர்சனம் செய்திருந்தார். இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு பயிற்சியாளராக திகழ்ந்த முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஜேசன் கில்லஸ்பி சுனில் கவாஸ்கர் பேசியது முட்டாள்தனமானது எனவும் சரியான வீரர்கள் பாகிஸ்தான் அணிக்கு கிடைத்தால் அதனால் எந்த அணியையும் வீழ்த்த முடியும் என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -

இது முழுமையான முட்டாள்தனம்

இதுகுறித்து கில்லஸ்பி கூறும் போது “இந்த வார்த்தை ஜாலங்களை நான் ஏற்கவில்லை. இந்திய பி அணி அல்லது சி அணி பாகிஸ்தான் டாப் அணியை வீழ்த்தும் என்று சுனில் கவாஸ்கர் கூறிய சில கருத்துக்களை நான் பார்த்தேன். இது ஒரு முட்டாள்தனம், முழுமையான முட்டாள்தனம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சரியான வீரர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு போதிய வாய்ப்புகளை அளித்து, அவர்கள் பிரகாசிக்க நேரம் கொடுத்து அவர்களின் விளையாட்டுகளை மேம்படுத்த நேரம் கொடுத்தால் அவர்களால் யாரையும் வெல்ல முடியும்.

இதையும் படிங்க:இந்த 3 பேர்கிட்ட ரொம்ப கவனமா இருங்க.. கொஞ்சம் மிஸ் ஆனா ஆட்டத்தையே மாத்திடுவாங்க – அம்பாதி ராயுடு எச்சரிக்கை

அதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் கிடையாது. சரியான திறமைசாலி வீரர்களை தேர்ந்தெடுத்து பாகிஸ்தான் நிர்வாகம் அவர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். பாகிஸ்தான் கிரிக்கெட்டை பொருத்தவரை பொறுமையின்மை அதிகமாக உள்ளது. அந்த கிரிக்கெட் வாரியத்தின் உயர் பதவிகளில் சரியான ஆட்களை நியமிக்க வேண்டும். அவர்களுக்கு போதிய நேரம் மற்றும் அவகாசம் கொடுத்து தங்கள் வேலைகளைச் செய்ய அனுமதிக்க வேண்டும். பயிற்சியாளர்கள் விஷயத்திலும் இதுவே பொருந்தும். எனவே பிரகாசிக்க போதிய வாய்ப்புகள் மற்றும் அவகாசம் வழங்க வேண்டும் என்பதே எனது கருத்து” என அவர் பேசியிருக்கிறார்.

- Advertisement -