நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களத்தில் என்ன நடந்தது என்பது குறித்து இந்திய அணியின் சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் அக்சர் படேல் பேசியிருக்கிறார்.
நடப்பு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நேற்று பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் முகமது ரிஸ்வான் மற்றும் சவுத் சகில் இருவரும் சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தார்கள். இந்திய அணிக்கு முக்கியமான திருப்புமுனை தேவைப்பட்ட நேரத்தில் என்ன நடந்தது என்பது குறித்து அக்சர் படேல் கூறி இருக்கிறார்.
தவறவிடப்பட்ட வாய்ப்பு
இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி வந்த முகமது ரிஸ்வான் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹர்ஷித் ராணா கோட்டை விட்டார். ஆனால் அடுத்த ஓவரிலேயே அக்சர் படேல் ரிஸ்வானை வீழ்த்தினார். இதைத் தொடர்ந்து சவுத் ஷகில் அக்சர் படேல் ஓவரில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை குல்தீப் யாதவ் கோட்டைவிட்டார். இதைத்தொடர்ந்து அடுத்து உடனே ஹர்திக் பாண்டியா பந்தை சவுத் சகில் அடிக்க, அதை அக்சர் படேல் கேட்ச் செய்து வெளியேற்றினார்.
இது குறித்து அக்சர் படேல் பேசும் பொழுது ” அந்த நேரத்தில் வெளிப்படையாக ஒரு திட்டம் சென்று கொண்டிருந்தது. அதற்கு முந்தைய ஹர்திக் பாண்டியா ஓவரில் ரிஸ்வான் கொடுத்த கேட்ச் விடப்பட்டிருந்தது. ஹர்திக் பாண்டியா அந்த நேரத்தில் கோபமாக இருந்தார். எனவே என்னுடைய ஓவரின் முதல் பந்தை ரிஸ்வான் தாக்கி விளையாடுவார் என்று நான் நினைக்கவில்லை. அவர்கள் ஸ்ட்ரைக் ரொட்டேட் செய்வார்கள் என்று நினைத்து பந்தை மெதுவாக வீசினேன். ஆனால் ரிஸ்வான் விக்கெட்டை கொடுத்து விட்டார். மேலும் அந்த நேரத்தில் எங்களுக்கு தேவைப்பட்ட இரண்டு திருப்புமுனைகளிலும் என்னுடைய பங்களிப்பு இருந்ததில் மகிழ்ச்சி”
குல்தீப் யாதவிடம் பேசினோம்
“நீங்கள் காயத்தில் இருந்து திரும்பி உடனடியாக பழைய நிலைக்கு வருவது என்பது கடினமான காரியம். நீங்கள் சில போட்டிகளில் விளையாடிய பின்னரே உங்களுடைய ரிதம் உங்களுக்கு கிடைக்கும். குல்தீப் யாதவுக்கு இதற்கு முன்பு இரண்டு போட்டிகள் கிடைத்தது. பின்பு அவர் பயிற்சியில் தன்னுடைய ரிதத்தை கண்டுபிடிக்க முயற்சி செய்தார்”
இதையும் படிங்க : இந்தியா ஒரே மைதானத்தில் ஆடுது. பெரிய நன்மை கிடைக்குது – ஐசிசி முடிவுக்கு கம்மின்ஸ் எதிர்ப்பு
“நேற்றைய போட்டியில் 40 வது ஓவர் வரை குல்தீப் யாதவ் சிறந்து விளங்கவில்லை என்பதை நீங்கள் பார்த்தீர்கள். அதற்குப் பிறகு அவர் சிறப்பான முறையில் திரும்பி வந்தார். அவரால் முடியும் என அணியில் உள்ள எல்லோரும் அவரிடம் பேசினோம். நாங்கள் நம்பிக்கை கொடுத்தோம். பிறகு நாற்பதாவது ஓவருக்கு மேல் வந்த அவர் சரியான லைன் அண்ட் லெந்தில் வீசியதோடு, பந்தை காற்றில் வீசி விக்கெட் கைப்பற்றி சிறப்பாக செயல்பட்டார்” என்று கூறி இருக்கிறார்.






