பிசிசிஐ அந்த கனவு பலிக்காது.. பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபியில் வாய்ப்பே தராது – நக்வி பேச்சு

0
112
PCB

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மேன் மொஹ்ஷின் நக்வி சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தான் நடத்துவது குறித்து பேசும் பொழுது இந்திய கிரிக்கெட் வாரியத்தை மறைமுகமாக விமர்சனம் செய்து பேசியிருக்கிறார்.

இந்த முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. அதே சமயத்தில் இந்திய அணி பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் செல்லாததால், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாயில் வைத்து நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சாம்பியன்ஸ் டிராபி இடமாற்றமா?

பாகிஸ்தான் பொதுவாக பெரிய உலக நாடுகள் கலந்து கொள்ளும் இந்த சாம்பியன் டிராபியை தங்கள் நாட்டில் முழுவதுமாக வெற்றிகரமாக நடத்துவது மிகவும் முக்கியமாக அவர்களுக்கு இருக்கிறது. இது கிரிக்கெட் தாண்டியும் பொதுவான பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமான விஷயம். எனவே அவர்கள் இந்த தொடரை நடத்துவதற்கு ஆரம்பத்தில் இருந்து தயாராகி வருகிறார்கள்.

இந்த நிலையில் போட்டி நடைபெறும் மைதானங்களை சீரமைக்கும் பணிகள் குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் பாகிஸ்தானால் நடத்தி முடிக்க முடியாது என்றும், இதனால் மொத்த சாம்பியன்ஸ் டிராப்பியும் பாகிஸ்தானை விட்டு வெளியில் நடத்தப்பட சூழ்நிலை இருப்பதாக செய்திகள் வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வந்தன.

- Advertisement -

மொஹ்ஷின் நக்வி விமர்சனம்

இது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய சேர்மேன் மொஹ்ஷின் நக்வி பேசும்பொழுது ” சிலர் எல்லைக்கு அப்பால் இருந்தும், சிலர் அந்தப் பக்கம் வெளியில் இருந்தும் வயதான பராமரிப்பு பணிகள் முழுவதும் முடிவடையாது, எனவே சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தானை விட்டு வெளியில் செல்லும் என்று கூறி வந்தார்கள். ஆனால் இன்று நான் சொல்கிறேன் முத்தரப்பு தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி இரண்டும் பாகிஸ்தானில் கட்டாயம் நடக்கும்”

இதையும் படிங்க : 44 ரன்.. போராடிய முகமத்.. கைவிட்ட சிஎஸ்கே வீரர்.. தோற்றும் முன்னேறிய தமிழ்நாடு அணி.. ரஞ்சி டிராபி

“எங்களுடைய எல்லைக்கு வெளியில் இருந்து எங்களுடைய மைதான பராமரிப்பு வேலைகளில் இருக்கும் சிறு குறைகளை கூட கண்டுபிடித்து பரப்புவதற்கு சிலர் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. மேலும் இங்கு வரவிருக்கும் அணிகளுக்கான நல்ல வரவேற்பு மற்றும் பாதுகாப்பை நாங்கள் வழங்குவோம். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தடையற்று போட்டிகளை தொடர்ந்து நடத்துவதற்கு தொடர்ந்து உழைத்து வருகிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -