44 ரன்.. போராடிய முகமத்.. கைவிட்ட சிஎஸ்கே வீரர்.. தோற்றும் முன்னேறிய தமிழ்நாடு அணி.. ரஞ்சி டிராபி

0
963
Ranji

நடப்பு ரஞ்சி டிராபி தொடரில் தமிழ்நாடு மற்றும் ஜார்க்கண்ட் அணிக்கு இடையே நடைபெற்ற பரபரப்பான போட்டியில் தமிழ்நாடு அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைத்திருக்கிறது.

இந்திய நட்சத்திர வீரர் இசான் கிஷான் தலைமையிலான ஜார்க்கண்ட் அணியை சாய் கிஷோர் தலைமையிலான தமிழ்நாடு அணி எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஜார்க்கண்ட் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆடுகளம் சுழல் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஒரே நாளில் 21 விக்கெட்

இந்த போட்டியில் முதலில் விளையாடிய ஜார்க்கண்ட் அணி 185ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து விளையாடிய தமிழக அணி 106 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து முதல் நாளிலேயே தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாட வந்த ஜார்க்கண்ட் அணி 5 ரன்னுக்கு ஒரு விக்கெட்டை இழந்தது. இந்த வகையில் ஒரே நாளில் 21 விக்கெட்டுகள் விழுந்தன.

இதைத்தொடர்ந்து ஜார்க்கண்ட் அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 154 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. தமிழக அணியின் தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தினார். அவருடன் இணைந்து அஜித் ராம் 4 விக்கெட் கைப்பற்றினார். இந்திய அணிக்கு 234 ரன்கள் இலக்கு நிர்ணைக்கப்பட்டது.

- Advertisement -

97 ரன்கள் 5 விக்கெட்

நேற்று தமிழ்நாடு அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இலக்கை நோக்கி விளையாடியது. நேற்றைய நாள் முடிவில் தமிழக அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்திருந்தது. மேற்கொண்டு தமிழக அணியின் வெற்றிக்கு ஐந்து விக்கெட்டுகள் கைவசம் இருக்க 97 ரன்கள் தேவைப்பட்டது. களத்தில் விஜய் சங்கர் மற்றும் அஜித் ராம் இருவரும் இருந்தார்கள்.

இதையும் படிங்க : 106 ரன்.. பெத் மூனி வரலாற்று சாதனை.. ஆஸி முதல் வீராங்கனையாக அசத்தல்.. இங்கிலாந்து டெஸ்ட்

இன்று தொடர்ந்து விளையாடிய தமிழ்நாடு அணி 189 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் 44 ரன்கள் வித்தியாசத்தில் ஜார்கண்ட் அணி வெற்றி பெற்றது. விஜய் சங்கர் 33 ரன்னில் வெளியேறினார். இன்னொரு முனையில் வேகப்பந்துவீச்சாளர் முகமத் முகமத் போராடி 35 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் தோல்வியடைந்து இருந்தாலும் கூட தமிழ்நாடு அணி தனது பிரிவில் முழுமையாக 7 போட்டிகள் விளையாடி 25 புள்ளிகள் எடுத்து இரண்டாவது இடத்தை பிடித்தது. மேலும் இதன் மூலம் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது!

- Advertisement -