இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான விராட் கோலி உள்நாட்டுத் தொடரான ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக 13 வருடங்களுக்குப் பிறகு இன்று விளையாடியிருக்கிறார்.
இந்த நிலையில் ஆர்சிபி அணியின் முன்னாள் வீரரான ஸ்ரீவத் கோஸ்வாமி இந்தியாவில் நட்சத்திர கலாச்சாரத்திற்கு எதிரான கருத்துக்கள் குறித்து சில விஷயங்களை கூறியிருக்கிறார்.
ரஞ்சி தொடரில் விராட் கோலி
இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி சிவப்பு பந்து கிரிக்கெட்டில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர்களில் மோசமாக விளையாடிய நிலையில் பிசிசிஐயால் உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் விளையாடும் படி அறிவுறுத்தப்பட்டார். இந்த சூழ்நிலையில் விராட் கோலி மற்றும் இந்திய வீரர்களான ரோகித் சர்மா மற்றும் கில் போன்ற முன்னணி வீரர்கள் விராட் கோலிக்கு முன்பாக உள்நாட்டு தொடரில் விளையாடி வரும் நிலையில் விராட் கோலி இன்று டெல்லி அணிக்காக களம் இறங்கினார்.
அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில் ரயில்வே அணிக்கு எதிராக விராட் கோலி களம் இறங்கியதும் மைதானத்தில் விராட் கோலி ரசிகர்கள் படை சூழ ஆரம்பித்தனர். திரும்பிய இடமெல்லாம் விராட் கோலி ரசிகர்கள் அவரை ஆரவாரப்படுத்த ஒரு சர்வதேச போட்டி நடைபெறுவது போல உள்நாட்டுத் தொடருக்கு விராட் கோலியால் பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.
நட்சத்திர கலாச்சாரம் ஏன் ஒழிய வேண்டும்
ஆஸ்திரேலியா தொடரின் டெஸ்ட் தோல்வியால் இந்தியாவில் நட்சத்திர கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும் என கம்பீர் உட்பட இந்திய முன்னாள் வீரர்கள் கூறிவந்த நிலையில் விராட் கோலி போன்ற ஒரு நட்சத்திரம் இருப்பதால்தான் ரஞ்சிப் போட்டிக்கு இவ்வளவு ரசிகர்கள் வந்திருக்கிறார்கள் என்று ஆர்சிபி அணியின் முன்னாள் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட்டில் பவுலருக்கு போதிய ஆதரவு இல்லை.. அதனாலதான் ஆஸி ஆதிக்க சக்தியா இருக்கு – அஸ்வின் திடுக் தகவல்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “இந்தியாவில் சூப்பர் ஸ்டார் கலாச்சாரத்தை எப்படி முடிவுக்கு கொண்டு வர முடியும். ஆனால் ஏன் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எனது கேள்வி. ஒரு சூப்பர் ஸ்டார் வீரர் தான் கூட்டத்தை கூட்டுகிறார் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நீங்கள் முடிவுக்கு கொண்டு வரக்கூடியது அல்லது கட்டுப்படுத்தக்கூடியது பிரைமா டோனா கலாச்சாரம். நாம் ஒரு தேசமாக சூப்பர் ஸ்டார்களை மதிக்கும் ஒரு கலாச்சாரத்தில் இருக்கிறோம்” என்று கூறி இருக்கிறார். நாளைய போட்டியில் விராட் கோலி களமிறங்குவார் என்று பெரும்பாலான ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.






