இந்திய கிரிக்கெட்டில் பவுலருக்கு போதிய ஆதரவு இல்லை.. அதனாலதான் ஆஸி ஆதிக்க சக்தியா இருக்கு – அஸ்வின் திடுக் தகவல்

0
138

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் முன்னணி சுழற் பந்துவீச்சாளராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி முடிந்த பிறகு தனது ஓய்வை அறிவித்தார்.

இந்த நிலையில் பெங்களூருவில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் பந்துவீச்சாளர்களுக்கு இந்திய கிரிக்கெட்டில் போதிய ஆதரவு கிடைப்பதில்லை என்று ஆச்சரியம் ஊட்டும் தகவல் ஒன்றை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கிய தகவல்

இந்தியா அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500க்கும் மேற்பட்ட விக்கெட்டுகள் வீழ்த்திய சுழற் பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், சமீபத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் போது தனது ஓய்வை அறிவித்தார். அதற்கு முன்பாக நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் அவரது செயல்பாடுகள் சிறப்பாக இல்லாத நிலையில் அவருக்கு பதிலாக வாசிங்டன் சுந்தர் இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட்டார்.

தான் ஓரம் கட்டப்படுவதை உணர்ந்த அஸ்வின் சரியாக ஆஸ்திரேலியா தொடரில் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்த நிலையில் அப்போது இந்த விஷயம் குறித்து சில எதிர்மறையான கருத்துக்கள் மற்றும் விமர்சனங்கள் இருந்தன. இருப்பினும் அவை அனைத்தையும் கடந்து தற்போது பெங்களூருவில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அஸ்வின் பந்துவீச்சாளர்களுக்கு பேட்ஸ்மேன்கள் போல் இந்திய கிரிக்கெட்டில் போதிய ஆதரவு கிடைப்பதில்லை என்றும், ஆஸ்திரேலிய அணி இதில் சரியாக செயல்படுவதால் தான் இன்றும் ஒரு ஆதிக்க சக்தியாக விளங்குகிறது என்று சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

ஆஸ்திரேலியா இதில் ஆதிக்க சக்தி

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “இது ஒரு நியாயமற்ற உலகமாக இருக்கிறது. பேட்ஸ்மேன்கள் கூச்சலிடப்படுகிறார்கள், ஆனால் பந்துவீச்சாளர்களுக்கு அப்படி இல்லை. ஆஸ்திரேலியாவில் போதுமான விக்கெட்டுகள் எடுக்காததால் ஆகாஷ் தீப் மற்றொரு போட்டியில் விளையாடாமல் போனதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆனால் ஒரு போட்டியில் சரியாக விளையாடாத பேட்ஸ்மேன் அடுத்த போட்டியில் விளையாடாமல் இருப்பது நீங்கள் பார்க்க முடியாது. ஆனால் இந்த விஷயத்தில் ஆஸ்திரேலியா உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக உள்ளது.

இதையும் படிங்க:கோலி ரன் அடிச்சாலும் அடிக்கலனாலும்.. இத மட்டும் செஞ்சா போதும் – விராட்டுக்கு ஹர்பஜன் சிங் அறிவுரை

ஆனால் இந்தியர்கள் இந்த விஷயத்தில் அப்படி இல்லை. நமக்கு எல்லாம் இருந்தாலும் ஆஸ்திரேலியா இன்றும் ஒரு ஆதிக்க சக்தியாக இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால் அவர்களின் வேர்கள் எங்கே இருக்கிறது என்று நன்றாக அவர்களுக்கு தெரியும். மேலும் டெஸ்ட் போட்டிகள் மற்றும் போட்டிகளை வெல்லும் முக்கிய வீரர்கள் பந்துவீச்சாளர்கள் என்பதை அவர்கள் நன்றாக அறிவார்கள். நாங்கள் அங்கு சென்றவுடன் அவர்களின் பதவீச்சாளர்கள் நன்றாக தரவுகளை பயன்படுத்த தொடங்குவார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -